நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

மெட்ரிகுலேஷன் பள்ளிகள் விருப்பம்போல விடுமுறை, தேர்வுகளை நிர்ணயிக்க முடியாது

சென்னை, ஜூன் 23:மெட்ரிகுலேஷன் மற்றும் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி நிர்வாகங்கள் இனி தங்களது விருப்பம்போல வேலை நாள்கள், தேர்வு நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களை நிர்ணயித்து செயல்பட முடியாது.   நிர்வாக

News image
Updated On :25 டிசம்பர் 2023, 2:27 pm

ஆர். ஆதித்தன்

சென்னை, ஜூன் 23:மெட்ரிகுலேஷன் மற்றும் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி நிர்வாகங்கள் இனி தங்களது விருப்பம்போல வேலை நாள்கள், தேர்வு நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களை நிர்ணயித்து செயல்பட முடியாது.

  நிர்வாக இடர்பாடுகள் ஏற்படுவதைத் தவிர்க்க ஒரே மாதிரியான பள்ளி வேலை நாட்கள், விடுமுறை நாட்கள், தேர்வு நாட்களை நடைமுறைப்படுத்த மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் முடிவு செய்துள்ளது.

  தமிழகத்தில் மெட்ரிகுலேஷன், மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி என மொத்தம் 3,619 பள்ளிகள் உள்ளன. இதில் சுமார் 23 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

  இதுவரை இந்தப் பள்ளிகள், தங்களின் விருப்பம்போல வேலைநாட்கள், விடுமுறை நாட்கள் மற்றும் தேர்வு நாட்களை நிர்ணயித்து செயல்பட்டு வந்தது. இதனால், பல்வேறு நிர்வாக இடர்பாடுகள் ஏற்பட்டு வந்தன.

  இதைத் தவிர்க்கும் வகையில், 2009-2010 ஆம் கல்வியாண்டில் அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலும் ஒரே சீரான வேலை விடுமுறை மற்றும் தேர்வு நாள்களை நடைமுறைக்கு கொண்டுவர மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் முடிவு செய்துள்ளது.

  பள்ளி வேலை நாள்கள், பள்ளி அளவிலான தேர்வு நாட்கள் மற்றும் விடுமுறை நாள்கள் சார்ந்த பட்டியல் மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குநரால் இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த இறுதி செய்யப்பட்ட பட்டியலை மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆய்வாளர்கள், அனைத்து மெட்ரிகுலேஷன், மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

  இத்துடன் உள்ளூர் விடுமுறையாக ஒதுக்கப்பட்ட நாட்களுக்கு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆய்வாளர்கள் முன் அனுமதி பெற்று விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மெட்ரிகுலேஷன் பள்ளி ஆய்வாளர்கள்:    மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரால் இறுதி செய்யப்பட்ட பட்டியலை, அந்தந்த பள்ளிகள் முறையாகச் செயல்படுத்துகிறதா என்பதை மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆய்வாளர்கள் ஆய்வு செய்வர் என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வேலை, விடுமுறை நாட்கள் பட்டியல்:

  மொத்த வேலை நாட்கள் - 225.

  உள்ளூர் விடுமுறை - 5.

  வேலை நாள்கள் - 220.

  தேர்வு நாட்கள் (காலாண்டு, அரையாண்டு, ஆண்டு தேர்வு) - 40.

  கற்பித்தல் வேலை நாள்கள் - 180.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.