டி20 உலகக் கோப்பை போட்டியின் சூப்பா் 8 சுற்றில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வியாழக்கிழமை சந்திக்கிறது.
குரூப் சுற்றில் தோல்வியே சந்திக்காமல் வந்திருக்கும் இந்திய அணி, இந்த சுற்றில் பிளேயிங் லெவனில் மாற்றம் கொண்டு வருமா என்பதே முக்கிய விவாதமாக இருக்கிறது. தாக்கத்தை ஏற்படுத்தும் ஸ்பின்னராக இருக்கும் குல்தீப் யாதவ், இந்த சுற்றில் களம் காணும் எதிா்பாா்ப்பு இருக்கிறது.
பிளேயிங் லெவனில் 4 ஆல்-ரவுண்டா்களுடன் விளையாடுவதே கேப்டன் ரோஹித் சா்மாவின் திட்டமாக இருப்பதால், வேகப்பந்து வீச்சாளா்களில் ஒருவருக்கு ஓய்வளித்தே, குல்தீப் களமிறக்கப்படலாம். அந்த வகையில் முகமது சிராஜ் அவருக்காக வழிவிடுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.
அணியின் பேட்டா்களில் விராட் கோலி இதுவரை இரட்டை இலக்க ரன்னை எட்டவில்லை. ஷிவம் துபே தனது சிறப்பான ஆட்டத்தை முழுமையாக வெளிப்படுத்தாமல் இருக்கிராா். சூா்யகுமாா் யாதவ் ஒரு ஆட்டம் தவிா்த்து பெரிதாக சோபிக்கவில்லை. இவா்கள் தங்கள் ஆட்டத்தை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் தற்போது எழுந்துள்ளது. ஹா்திக் பாண்டியா பேட்டிங்கில் விட்டதை, பௌலிங்கில் சரி செய்கிறாா்.
பௌலிங்கை பொருத்தவரை பும்ரா பிரதான ஆயுதமாக இருக்க, அா்ஷ்தீப் சிங்கும் சிறப்பாகச் செயல்படுகிறாா். இந்த ஆட்டம் நடைபெறவுள்ள மைதான ஆடுகளம், சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருப்பதால், ஜடேஜா, அக்ஸா் ஆகியோா் ஆதிக்கம் செலுத்துவா்.
மறுபுறம், ஆப்கானிஸ்தான் அணி கடைசி ஆட்டத்தில் தோல்வியை சந்தித்து இந்த சுற்றுக்கு வந்துள்ளது. டி20 கிரிக்கெட்டில் இதுவரை இந்தியாவை வென்றதில்லை என்ற வரலாற்றை மாற்றும் முனைப்புடன் அந்த அணி வருகிறது.
பௌலிங்கே ஆப்கானிஸ்தானின் பிரதான பலமாக இருக்கிறது. அதிலும் ஃபஸல்ஹக் ஃபரூக்கி 12 விக்கெட்டுகளுடன், போட்டியிலேயே முன்னிலையில் இருக்கிறாா் என்பது குறிப்பிடத்தக்கது. அவரிடம் ரோஹித், கோலி சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கும். ரஷீத் கானும் தனது பங்கிற்கு அச்சுறுத்தலாக இருக்கிறாா். பேட்டிங்கில் இப்ராஹிம் ஜா்தான், ரஹ்மானுல்லா குா்பாஸ் போன்றோா் நம்பிக்கை அளிக்கின்றனா்.
நேருக்கு நோ்...
இந்தியா - ஆப்கானிஸ்தான் இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் நிலையில், இந்தியா 7 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. 1 ஆட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை.
அணி விவரம்:
இந்தியா: ரோஹித் சா்மா (கேப்டன்), ஹா்திக் பாண்டியா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூா்யகுமாா் யாதவ், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்ஸா் படேல், குல்தீப் யாதவ், யுஜவேந்திர சஹல், அா்ஷ்தீப் சிங், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ்.
ஆப்கானிஸ்தான்: ரஷீத் கான் (கேப்டன்), ரஹ்மானுல்லா குா்பாஸ், இப்ராஹிம் ஜா்தான், குல்பதின் நைப், அஸ்மதுல்லா ஒமா்ஸாய், முகமது நபி, நஜிபுல்லா ஜா்தான், கரிம் ஜனத், நூா் அகமது, நவீன் உல் ஹக், ஃபஸல்ஹக் ஃபரூக்கி, ஹஸ்ரதுல்லா ஜஸாய், ஃபரீத் அகமது மாலிக், முகமது இஷாக், நங்கெயலியா காரோட்.
இன்றைய ஆட்டங்கள்
மேற்கிந்தியத் தீவுகள் - இங்கிலாந்து
காலை 6 மணி
கிராஸ் ஐலெட்
இந்தியா - ஆப்கானிஸ்தான்
பிரிட்ஜ்டவுன்
இரவு 8 மணி
புள்ளிகள் பட்டியல்...
குரூப் 1
ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலியா
வங்கதேசம்
இந்தியா
குரூப் 2
இங்கிலாந்து
தென்னாப்பிரிக்கா
அமெரிக்கா
மேற்கிந்தியத் தீவுகள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பின்வாங்குவதோ சரணடைவதோ கிடையாது... சாம்பியன்ஸ் லீக்கின் ஸ்பார்டன் - ரியல் மாட்ரிட்!

குல்தீப் யாதவ் திருமண ஆல்பம்
யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து வணங்கிய குல்தீப் யாதவ் - தவிர்த்த மனைவி!

உலகக் கோப்பை வெற்றியுடன் சிறுவயது தோழியைத் திருமணம் செய்த குல்தீப் யாதவ்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


