லக்னௌ : உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் குல்தீப் யாதவ் வாழ்த்து பெற்றார். அதேவேளையில், அவர் அருகிலிருந்த அவருடைய மனைவி, யோகி காலில் விழுவதைத் தவிர்த்ததையும் பார்க்க முடிந்தது. இந்தக் காணொலி சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு பரபரப்பாகப் பேசப்படுகிறது.
குல்தீப் யாதவுக்கும் அவரது சிறுவயது தோழி வன்ஷிகாவுக்கும் மார்ச் 14-இல் முசோரியில் திருமணம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, இன்று(மார்ச் 17) லக்னௌ நகரில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த யோகி ஆதித்யநாத் அங்கு புதுமண தம்பதியை வாழ்த்தினார்.
நிகழ்ச்சிக்கு வருகை தந்த யோகி, காரை விட்டு கீழிறங்கி விழா மேடைக்கு நடந்து வருவதைக் கண்ட குல்தீப் உடனடியாக அவர் அருகே ஓடிச்சென்று காலில் விழுந்து வணங்கினார். அதன் தொடர்ச்சியாக, யோகி மற்றும் குல்தீப் அருகாமையில் நின்ற வன்ஷிகா இருகைகூப்பி உத்தரப் பிரதேச முதல்வருக்கு வணக்கம் தெரிவித்ததுடன் நிறுத்திக்கொண்டார்; கால்களில் விழவில்லை என்பது பரபரப்பாகப் பேசப்படுகிறது.
Summary
Kuldeep Yadav post-wedding reception ceremony Yogi Adityanath offered blessings to the newlyweds
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறாது என்பது பாஜகவுக்குத் தெரியும்: தேஜஸ்வி யாதவ்

தேஜஸ்வி யாதவை வரவேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

வந்தே மாதரத்தை எதிர்ப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள்!

உலகக் கோப்பை வெற்றியுடன் சிறுவயது தோழியைத் திருமணம் செய்த குல்தீப் யாதவ்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

