தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

டி20 உலகக் கோப்பையில் முதல் வெற்றியைப் பதிவு செய்த உகாண்டா!

டி20 உலகக் கோப்பையில் தனது 2 ஆவது போட்டியில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது உகாண்டா அணி.

News image
உகாண்டா அணி வீரர்கள். - Ramon Espinosa
Updated On :6 ஜூன் 2024, 7:44 am

DIN

டி20 உலகக் கோப்பையில் தனது 2 ஆவது போட்டியில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது உகாண்டா அணி.

டி20 உலகக் கோப்பையில் குரூப் சி-யில் உகாண்டா, பப்புவா நியூ கினியா அணிகள் இன்று அதிகாலை (இந்திய நேரப்படி காலை 5மணி ) மோதின.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பப்புவா நியூ கினியா 19.1 ஓவருக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 77 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பப்புவா நியூ கினியா அணியில் அதிகபட்சமாக ஹிரி ஹிரி, 15 ரன்கள் எடுத்தார். அடுத்து விளையாடிய உகாண்டா அணி 18.2 ஓவரில் 78/7 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

உகாண்டா அணியில் ரியாஜத் அலி ஷா 33 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

முதல் போட்டியில் தோல்வியை தழுவிய உகாண்டா அணி டி20 உலகக் கோப்பையில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.