திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!

ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது...

News image

ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது... - IPL

Updated On :31 மே 2026, 11:41 pm IST

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன் ஸை ஞாயிற்றுக்கிழமை வென்று, கோப்பையைத் தக்கவைத்துக் கொண்டது.

17 ஆண்டுகளுக்குப் பிறகு போட்டியில் முதல்முறையாக கடந்த சீசனில் சாம்பியனான பெங்களூரு, வெற்றி மேடையை விட்டுத்தராமல் அப்படியே இந்த சீசனிலும் நிலைத்துவிட்டது.

அகமதாபாதில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், முதலில் குஜராத் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் எடுக்க, பெங்களூரு 18 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழந்து 161 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.

அந்த அணியின் பெ ளலர்களான ராசிக் சலாம், புவனேஷ்வர் குமார், ஜாஷ் ஹேஸில்வுட் ஆகியோர் அபாரமாக பெளலிங் செய்து குஜராத் பேட்டிங் வரிசையை முற்றிலுமாக சரிக்க, பின்னர் பேட்டிங்கில் விராட் கோலி ஆட்டமிழக்காமல் அரை சதம் கடந்து அணியை வெற்றிக்கு வழிநடத்தினார்.

முன்னதாக டாஸ் வென்ற பெங்களூரு, பெ ளலிங்கை தேர்வு செய்தது. குஜராத் இன்னிங்ஸை தொடங்கியோரில், கேப்டன் ஷுப்மன் கில் 2 பவுண்டரிகளுடன் 10 ரன்களுக்கு 3 -ஆவது ஓவரில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கண்டார்.

ஒன் டவுனாக நிஷாத் சிந்து களம் புக, அடுத்த ஓவரிலேயே சாய் சுதர்சன் 2 பவுண்டரிகளுடன் 12 ரன்களுக்கு 4 -ஆவது ஓவரில் சாய்க்கப்பட்டார். இவ்வாறாக பவர்பிளேயிலேயே இரு முக்கியமான விக்கெட்டுகளை இழந்தது குஜராத்.

4 -ஆவது பேட்டராக ஜாஸ் பட்லர் வர, நிஷாந்த் சிந்து 3 பவுண்டரிகளுடன் 20 ரன்களுக்கு 8 -ஆவது ஓவரில் வெளியேறினார். அப்போது பேட் செய்ய வந்த வாஷிங்டன் சுந்தர், பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, விக்கெட்டை இழக்காமல் நீடித்து, ரன்களும் சேகரித்தார்.

ஆனால் தகுந்த பார்ட்னர்ஷிப் அமையாத வகையில், மறுபுறம் பேட்டர்கள் நிலைக்காமல் அடுத்தடுத்து வெளியேறினர். பட்லர் 1 பவுண்டரியுடன் 19, அர்ஷத் கான் 2 சிக்ஸர்களுடன் 15, ராகுல் தெவாதியா 1 பவுண்டரியுடன் 7, ஜேசன் ஹோல்டர் 1 பவுண்டரியுடன் 7, ரஷீத் கான் 1 சிக்ஸருடன் 7 ரன்களுக்கு விடைபெற்றனர்.

ஓவர்கள் முடிவில் வாஷிங்டன் சுந்தர் 37 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 50, ககிசோ ரபாடா 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பெங்களூரு தரப்பில் ராசிக் சலாம் 3, புவனேஷ்வர் குமார், ஜாஷ் ஹேஸில்வுட் ஆகியோர் தலா 2, கிருணால் பாண்டியா 1 விக்கெட் எடுத்தனர்.

அடுத்து 156 ரன்களை நோக்கி விளையாடிய பெங்களூரு அணியில், வெங்கடேஷ் ஐயர் - விராட் கோலி இணை முதல் விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு அடித்தளமிட்டது.

வெங்கடேஷ் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 32 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, விராட் கோலி நிலைத்து நின்று ரன்கள் சேர்த்தார்.

மறுபுறம், தேவ்தத் படிக்கல் 1, கேப்டன் ரஜத் பட்டிதார் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 15, கிருணால் பாண்டியா 1, டிம் டேவிட் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 24 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.

முடிவில் கோலி 42 பந்துகளில் 9 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 75 ரன்கள் சேர்த்து, அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜிதேஷ் சர்மா 1 பவுண்டரியுடன் 11 ரன்களோடு துணை நின்றார். சவால் அளிக்கத் தவறிய குஜராத் பெ ளலர்களில் ரஷீத் கான் 2, முகமது சிராஜ், ககிசோ ரபாடா, அர்ஷத் கான் ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

Summary

IPL finals, RCB defeated the Gujarat Titans to win the championship title for the second time.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.