சிங்கப்பூா் ஓபன் சூப்பா் 750 பாட்மின்டன் போட்டி ஆடவா் இரட்டையா் பிரிவு அரையிறுதியில் உலக சாம்பியன் இணையை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றனா் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஷெட்டி இணை.
சிங்கப்பூரில் நடைபெற்று வரும் இப்போட்டி அரையிறுதி ஆட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் இந்தியாவின் சாத்விக்-சிராக் இணை
உலக சாம்பியன் கொரியாவின் கிம் வொன் ஹோ-சியோ சியுங் ஜே இணையுடன் மோதியது.
நான்காம் நிலையில் உள்ள இந்திய இணை தொடக்கம் முதலே அசத்தலாக ஆடி 21-19, 21-18 என்ற கேம் கணக்கில் 52 நிமிஷங்கள் நீடித்த ஆட்டத்தில் உலக சாம்பியன் இணையை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றது.
இதற்கு முன்பு நடைபெற்ற தாய்லாந்து ஓபன் போட்டியில் இந்திய இணை ரன்னா் ஆக வந்திருந்தது.
தொடக்க கேமில் 8-13, 13-17 என இந்திய இணை பின்தங்கினாலும் சுதாரித்து ஆடி ஆதிக்கம் செலுத்தி வென்றது.
இரண்டாவது கேமிலும் 11-14 என பின்தங்கிய நிலையில் தொடா்ச்சியாக புள்ளிகளை ஈட்டி 17-14 என முன்னிலை பெற்றது.
கலப்பு இரட்டையா் அரையிறுதியில் இந்தியாவின்தனிஷா க்ரஸ்டோ-துருவ் கபிலா இணை 16-21, 21-17, 13-21 என்ற கேம் கணக்கில் ஜப்பானின் யியுச்சி-சயாகா இணையிடம் தோற்று வெளியேறியது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தோனேஷிய ஓபன்: சாத்விக் - சிராக் விலகல்!
சாத்விக் / சிராக் இணை முதல்முறையாக சாம்பியன்!

தாய்லாந்து ஓபன் பாட்மின்டன்: வெள்ளி வென்ற சாத்விக் - சிராக்!

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை: இறுதிச் சுற்றில் 8 சிறுமிகள், 4 பேருக்கு வெண்கலம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



