இந்தோனேஷிய ஓபனிலிருந்து இந்திய பாட்மின்டன் வீரர்கள் சாத்விக் - சிராக் காயம் காரணமாக போட்டியின் பாதியிலேயே விலகினார்கள்.
இந்தோனிஷிய ஓபன் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் இந்திய இணையர்கள் மலேசிய இணையர்களிடம் மோதினார்கள். இந்தப் போட்டியில் இந்திய இணையினர் 6-11 என பின் தங்கியிருந்தார்கள்.
இந்தப் போட்டியில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டிக்கு தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தினால் இந்திய இணையர்கள் இந்தப் போட்டியில் பாதியிலேயே விலகுவதாக அறிவித்தார்கள்.
முக்கியமான அடுத்தகட்ட போட்டிகளில் விளையாட இந்திய இணையர்கள் விரைவில் குணமாக கவனம் செலுத்துவார்கள். சாத்விக் விரைவில் குணமடைந்து களத்துக்குத் திரும்புவார் என பிஏஐ தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் இந்த இணை முதல்முறையாக சிங்கப்பூர் ஓபனை வென்றிருந்தார்கள். சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் பட்டத்தை வென்ற இந்த இணைக்கு தற்போது பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, இந்தாண்டு நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப், ஸ்விஸ் ஓபனில் சாத்விக் தோள்பட்டை காரணமாக விளையாடாததும் குறிப்பிடத்தக்கது.
Summary
Satwik-Chirag withdraw from Indonesia Open after Rankireddy's shoulder injury
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சாத்விக் / சிராக் இணை முதல்முறையாக சாம்பியன்!
தனியார் மருத்துவமனைகள் திறக்க தற்காலிக அனுமதி: தவெக அரசுக்கு சீமான் கண்டனம்

தாய்லாந்து ஓபன் பாட்மின்டன்: வெள்ளி வென்ற சாத்விக் - சிராக்!

15 புள்ளிகள் ஃபாா்மட்டால் பெரிதாக வித்தியாசம் இல்லை: சிராக் ஷெட்டி
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



