தாய்லாந்து ஓபன் சூப்பர் 500 பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி இணை முதல் சுற்றில் செவ்வாய்க்கிழமை வெற்றி கண்டது.
இந்தியாவின் நம்பர் 1 ஜோடியான சாத்விக்/சிராக், 21-19, 21-23, 21-10 என்ற கேம்களில், இந்தோனேசியாவின் முஹ் புத்ரா எர்வியான்சியா/பகஸ் மெளலானா கூட்டணியை போராடி வீழ்த்தியது. இந்த ஆட்டம் 1 மணிநேரம், 4 நிமிஷங்களில் நிறைவடைந்தது. இந்திய இணை அடுத்த சுற்றில், மலேசியாவின் பிரையன் ஜெரிமி/முகமது ஹாய்கல் ஜோடியை சந்திக்கிறது.
மகளிர் இரட்டையர் முதல் சுற்றில், ருதுபர்னா பாண்டா/ஸ்வேதபர்னா பாண்டா கூட்டணி, 9-21, 11-21 என்ற நேர் கேம்களில், சீன தைபேவின் லின் சி சுன்/யாங் சு யுன் இணையிடம் 24 நிமிஷங்களில் தோல்வியைத் தழுவியது.
ஆடவர் இரட்டையரில், போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருந்த ஹரிஹரன் அம்சகருணன்/எம்.ஆர்.அர்ஜுன் இணை 18-21, 20-22 என்ற கேம்களில், சீன தைபேவின் சென் ஜி ரே/லின் யு சியே கூட்டணியிடம் போராடி வீழ்ந்தது. இந்த ஆட்டம் 27 நிமிஷங்களில் நிறைவடைந்தது. இதனிடையே, அனுஷ்கா சஹாபுர்கர், மானவ் செளதரி, மோஹித் ஜக்லன்/லக்ஷிதா ஜக்லன் ஆகியோர் தங்கள் பிரிவு தகுதிச்சுற்றில் தோல்வி கண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










