திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வெளியேறியது இந்திய மகளிர் அணி

News image

பி.வி.சிந்து

Updated On :29 ஏப்ரல் 2026, 5:12 am IST

தாமஸ் மற்றும் உபர் கோப்பை ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்திய மகளிர் அணி 0-5 என சீனாவிடம் தோல்வி கண்டு, போட்டியிலிருந்து வெளியேறியது.

முதல் டையில் டென்மார்க்கிடம் தோற்ற இந்தியா, அடுத்த டையில் உக்ரைனை வீழ்த்தியது. குரூப் சுற்றின் கடைசி டையில், 16 முறை சாம்பியனான சீனாவுக்கு எதிராகத் தோல்வி கண்ட இந்தியா, காலிறுதி வாய்ப்பை இழந்தது.

இந்திய நேரப்படி திங்கள்கிழமை நள்ளிரவில் நடைபெற்ற இந்த டையில், முதலில் ஒற்றையர் மோதலில், பி.வி.சிந்து 16-21, 21-19, 19-21 என்ற கேம்களில் வாங் ஜி யிவிடம், 1 மணிநேரம், 18 நிமிஷங்கள் போராடி வீழ்ந்தார்.

அடுத்து இரட்டையர் பிரிவு மோதலில், பிரியா கொன்ஜெங்பம்/ஸ்ருதி மிஸ்ரா ஜோடி 11-21, 8-21 என்ற கணக்கில், லியு செங் ஷு/டான் நிங் இணையிடம் 34 நிமிஷங்களில் தோல்வியைத் தழுவியது.

3-ஆவது ஆட்டத்தில் இஷாராணி பருவா 20-22, 13-21 என்ற கேம்களில் சென் யு ஃபெய்யிடம் 44 நிமிஷங்களில் தோல்வியுற்றார்.

2-ஆவது இரட்டையர் மோதலில் தனிஷா கிராஸ்டோ/கவிபிரியா செல்வம் இணை 21-10, 12-21, 19-21 என்ற வகையில், லுவோ ஜு மின்/ஜாங் ஷு ஜியான் கூட்டணியிடம் 59 நிமிஷங்கள் போராடித் தோற்றது.

கடைசியாக நடைபெற்ற ஒற்றையர் ஆட்டத்தில், தேவிகா சிஹக் 21-19, 17-21, 10-21 என்ற கேம்களில் ஜு வென் ஜிங்கிடம் 58 நிமிஷங்களில் தோல்வியைத் தழுவினார்.

போட்டியிலிருந்து இந்திய மகளிர் அணி வெளியேறிவிட்ட நிலையில், தாமஸ் கோப்பை போட்டியில் இந்திய ஆடவர் அணி களத்தில் உள்ளது. காலிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ள ஆடவர் அணி, குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் பலம் வாய்ந்த சீனாவை புதன்கிழமை (ஏப். 29) சந்திக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.