திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சாம்பியன் பட்டத்துக்கு நெருக்கமாக பார்சிலோனா

News image
Updated On :4 மே 2026, 5:36 am IST

பார்சிலோனா: ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியனான பார்சிலோனா, கோப்பையைத் தக்கவைக்க வைக்கும் வாய்ப்புக்கு நெருக்கமாக வந்துள்ளது.

இப்போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 34}ஆவது சுற்று ஆட்டத்தில் பார்சிலோனா 2}1 கோல் கணக்கில் ஒசாசுனாவை வீழ்த்தியது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் எந்த அணிக்குமே கோல் வாய்ப்பு கிடைக்கவில்லை.

2}ஆவது பாதியின் இறுதிக் கட்டம் வரை அதே நிலை நீடிக்க, 81}ஆவது நிமிஷத்தில் பார்சிலோனாவின் கோல் கணக்கை ராபர்ட் லெவண்டோவ்ஸ்கி தொடங்கினார். அடுத்து, ஃபெரான் டோரஸ் ஸ்கோர் செய்ய, பார்சிலோனா 2}0 என முன்னிலை பெற்றது.

விடாப்பிடியாக விளையாடிய ஒசாசுனா தரப்பில் ரெüல் கார்சியா 88}ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து, பார்சிலோனாவுக்கு சவால் அளித்தார். எனினும், எஞ்சிய நேரத்தில் மேலும் ஒசாசுனாவுக்கு கோல் வாய்ப்பு கிடைக்காமல் போக, முடிவில் பார்சிலோனா 2}1 என வெற்றி பெற்றது. புள்ளிகள் பட்டியலில் தற்போது பார்சிலோனா 88 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்க, ரியல் மாட்ரிட் 74 புள்ளிகளுடன் 2}ஆவது இடத்தில் இருக்கிறது.

இந்திய நேரப்படி, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு எஸ்பான்யோûஸ எதிர்கொண்ட ரியல் மாட்ரிட் அந்த ஆட்டத்தில் வென்றிருந்தால் மட்டுமே, சாம்பியன் பட்டத்துக்கான பந்தயத்தில் நிலைக்க முடியும். மாறாக, தோல்வி அல்லது டிராவை அந்த அணி பதிவு செய்திருந்தால், பார்சிலோனா சாம்பியனாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.