டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

பிரேசிலை வீழ்த்திய பிரான்ஸ்..! அணியில் தேர்வாகாத நெய்மர் பெயரை முழக்கமிட்ட ரசிகர்கள்!

பிரான்ஸிடம் தோல்வியுற்ற பிரேசில் அணியின் போட்டி குறித்து...

News image

எம்பாப்வே, நெய்மர். - படங்கள்: ஏபி, எக்ஸ் / நெய்மர்.

Updated On :27 மார்ச் 2026, 11:56 am

உலகக் கோப்பைக்கு முன்பாக நட்பு ரீதியான போட்டியில் போஸ்டனில் பிரேசில் அணியும் பிரான்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் 1-2 என பிரான்ஸ் அசத்தல் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டிக்கு தேர்வாகாத பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் பெயரை அந்நாட்டு ரசிகர்கள் முழக்கமிட்டதால் திடலில் பரபரப்பு ஏற்பட்டது.

பிரான்ஸ் அணியில் எம்பாப்வே 32, எகிடிகி 65ஆவது நிமிஷங்களில் கோல் அடித்தார்கள். பிரேசில் அணியில் பிரெமர் 78ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தார்.

பிரேசில் தேசிய அணிக்காக அதில கோல்கள் (79) அடித்த நெய்மர் (34 வயது) இந்தப் போட்டியில் தேர்வு செய்யப்படவில்லை. கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியிலும் நெய்மர் தேர்வு செய்யப்படாதது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இது குறித்து பிரேசில் அணியின் பயிற்சியாளர் கார்லோ அன்செலாட்டி, “இப்போதைக்கு அணியில் யார் இருக்கிறார்களோ அவர்களைப் பற்றிதான் பேச முடியும். அவர்களும் கடினமாக உழைத்துதான் இந்த இடத்துக்கு வந்திருக்கிறார்கள். அதில் நான் நிறைவடைகிறேன்” என்றார்.

வினிசியஸ், ரஃபினீயா இருவரும் நன்றாகவே விளையாடியதாகக் கூறினார். அடுத்த போட்டியில் பிரேசில் அணி குரோஷியாவுடன் மார்ச் 31ஆம் தேதியில் விளையாடுகிறது.

உலகக் கோப்பைப் போட்டிகள் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை வட அமெரிக்காவில் நடைபெற இருக்கின்றன.

நெய்மர் தற்போது தனது சிறுவயது அணியான சந்தோஷ் கிளப்பில் விளையாடி வருகிறார். முழங்காலில் அறுவைச் சிகிச்சையை முடித்த அவர் உலகக் கோப்பையில் பங்கேற்கும் ஆர்வத்துடன் இருப்பதும் இந்த டிசம்பருடன் ஓய்வு பெறும் எண்ணத்தில் இருப்பதாகக் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Summary

Ancelotti shrugs off Neymar chants after Brazil lose to France.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.