ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து குஜராத் டைட்டன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மேத்யூ ஹைடன் பேசியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நேற்று (ஏப்ரல் 4) நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தியது.
இந்த நிலையில், பேட்டர்கள் சற்று பொறுப்புடன் விளையாட வேண்டும் என குஜராத் டைட்டன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நேற்றையப் போட்டியில் ரவி பிஷ்னோய்க்கு எதிராக வாஷிங்டன் சுந்தர் மிகப் பெரிய முடிவை எடுத்தார். பிஷ்னோய் போன்ற வீரர்களின் பந்துவீச்சில் பெரிய ஷாட் விளையாடும்போது, பிழையின்றி விளையாட வேண்டும். ஆட்டம் முதல் 12 ஓவர்கள் வரை குஜராத் டைட்டன்ஸ் அணியின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதன் பின், அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் விழுந்தது ஆட்டத்தின் போக்கை மாற்றியது.
ஷாருக்கானின் ரன் அவுட்டும் அணிக்கு மிகப் பெரிய இழப்பாக மாறியது. அந்த ரன்னை ஓடலாமா, வேண்டாமா என்பது களத்தில் இருந்த ஷாருக்கான் மற்றும் ரஷித் கானின் முடிவே. ஆனால், அது அணிக்கு பாதகமாக அமைந்துவிட்டது. சேஸிங்கின்போது, பேட்டர்கள் சூழலுக்கு ஏற்ப சற்று பொறுப்புடன் விளையாட வேண்டும் என்றார்.
நேற்றையப் போட்டியில் 127 ரன்களில் மூன்றாவது விக்கெட்டினை இழந்த குஜராத் டைட்டன்ஸ் அணி, அடுத்த 6 ரன்களில் மேலும் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது ஆட்டத்தின் திருப்புமுனையாக மாறியது குறிப்பிடத்தக்கது.
Summary
Gujarat Titans' batting coach, Matthew Hayden, has spoken about the defeat suffered in the match against the Rajasthan Royals.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சதத்தை தவறவிட்ட சூர்யவன்ஷி: குஜராத் அணிக்கு 215 ரன்கள் இலக்கு

குஜராத் டைட்டன்ஸின் தோல்விக்கு காரணம் இதுதான்; பயிற்சியாளர் கூறியதென்ன?
முதலிடத்துக்கான போட்டியில் இன்றிரவு மோதும் ராஜஸ்தான் - குஜராத்!

தடுமாறும் ராஜஸ்தான் ராயல்ஸ்; வெற்றியை தொடரும் முனைப்பில் குஜராத் டைட்டன்ஸ்!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK




