மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சாம்பியன்ஸ் லீக்கில் காலிறுதிக்கு முன்னேறிய 8 அணிகள்..! யார் யாருடன் மோதுகிறார்கள்?

சாம்பியன்ஸ் லீக்கில் காலிறுதிக்கு முன்னேறிய 8 அணிகள் குறித்து...

News image

ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் ஆட்ட நாயகன் விருது வென்றவர்கள். - படங்கள்: எக்ஸ் / சாம்பியன்ஸ் லீக்.

Updated On :19 மார்ச் 2026, 8:00 am

சாம்பியன்ஸ் லீக்கில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுகள் முடிவடைந்து காலிறுதிக்கு 8 அணிகள் முன்னேறியுள்ளன.

முதல்கட்டமாக, நடப்பு சாம்பியன் பாரீஸ் செயின்ட் ஜெர்மெய்ன் (பிஎஸ்ஜி), ரியல் மாட்ரிட், ஆர்செனல், ஸ்போர்டிங் ஆகிய அணிகள் காலிறுதிக்கு புதன்கிழமை முன்னேறின.

இரண்டாம் கட்டமாக நள்ளிரவு நடைபெற்ற போட்டிகளில் பார்சிலோனா 8-3 என நியூகேஸிலையும் பயர்ன்மியூனிக் 10-2 என அட்லாண்டாவையும் லிவர்பூல் அணி 4-1 என கலாடசரே அணியையும் அத்லெடிகோ மாட்ரிட் 7-5 என டோட்டஹம் ஸ்பர் அணியையும் வீழ்த்தின.

காலிறுதிக்கு முன்னேறியுள்ள 8 அணிகள்: பிஎஸ்ஜி, ரியல் மாட்ரிட், ஆர்செனல், ஸ்போர்டிங், பார்சிலோனா, லிவர்பூல், பயர்ன் மியூனிக், அத்லெடிகோ மாட்ரிட்.

யார் யாருடன் மோதுகிறார்கள்? இரண்டு கட்டமாக நடைபெறும் காலிறுதிப் போட்டிகளில் பார்சிலோனா - அத்லெடிகோ, ரியல் மாட்ரிட் - பயர்ன் மியூனிக், பிஎஸ்ஜி - லிவர்பூல், ஸ்போர்டிங் - ஆர்செனல் அணிகளும் மோதுகின்றன.

ரியல் மாட்ரிட் - பயர்ன் மியூனிக் அணிகள் மோதும் போட்டி கிட்டதட்ட இறுதிப் போட்டி அளவுக்கு சுவாரசியமாகவும் பார்சிலோனா - அத்லெடிகோ மாட்ரிட் போட்டி அரையிறுதி அளவுக்கு சுவாரசியமாகவும் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

Champions League: Barcelona scores 7, Liverpool revives, Bayern cruises and Atletico survives

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.