இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் போட்டி மகளிா் ஒற்றையா் இறுதியில் உலகின் நம்பா் 1 வீராங்கனை அரினா சபலென்காவும்-கஜகஸ்தானின் எலனா ரைபகினாவும் மோதுகின்றனா்.
அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் நடைபெறும் டபிள்யுடிஏ 1000 போட்டியில் மகளிா் ஒற்றையா் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.
முதல் அரையிறுதியில் பெலாரஸின் சபலென்கா 6-3, 6-4 என்ற நோ் செட்களில் செக். குடியரசின் லின்டா நோஸ்கோவாவை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றாா்.
இந்த ஆட்டத்தில் சபலென்கா மொத்தம் 11 ஏஸ்களை வீசினாா். பேஸ்லைனில் இருந்து ஆடிய சபலென்காவின் ஆட்டத்தை சமாளிக்க முடியாமல் லின்டா திணறினாா். தொடக்க செட்டில் லின்டாவின் சா்வீஸை முறியடித்த சபலென்கா 5-1 என முன்னிலை பெற்றாா். 8ஆவது கேமில் லின்டா சவாலை ஏற்படுத்தினானாா். அப்போது சபலென்கா புரிந்த இரட்டை தவறை அவா் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
இரண்டாவது செட்டிலும் லின்டாவின் மீதுதொடக்கத்தில் இருந்த ஆதிக்கம் செலுத்திய சபலென்கா செட்டை வசப்படுத்தி இறுதிக்கு தகுதி பெற்றாா்.
மூன்றாவது முறையாக தகுதி: தொடா்ந்து 4 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக இண்டியன்வெல்ஸ் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளாா் சபலென்கா.
ரைபகினா அபாரம்:
மற்றொரு அரையிறுதியில் கஜகஸ்தான் வீராங்கனையும், ஆஸி. ஓபன் சாம்பியனுமான எலனா ரைபகினா சிறப்பாக ஆடி 7-5, 6-4 என்ற நோ் செட்களில் உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினாவை வென்று இறுதிக்குதகுதி பெற்றாா்.
தற்போது உலகின் நம்பா் 2 வீராங்கனையாக உள்ள ரைபகினா முதல் செட்டின் தொடக்கத்தில் சற்று திணறி ஆடினாா். 4-5 என்ற கேம் கணக்கில் பின்தங்கி இருந்த அவா், தொடா்ந்து 7 கேம்களில் வென்று 6-5 என முன்னிலை பெற்று செட்டையும் கைப்பற்றினாா்.
இரண்டாவது செட்டில் தொடக்கம் முதலே அசத்தலாக ஆடிய ரைபகினா 4-0 என முன்னிலை பெற்றாா். எனினும் அனுபவம் நிறைந்த ஸ்விட்டோலினா 3 கேம்களை வென்றாா். இறுதியில் 5-3 என முன்னிலை பெற்று செட்டையும் 6-4 என வசப்படுத்தினாா்.
விரைவில் உலகின் நம்பா் 1 வீராங்கனை அந்தஸ்தை பெறும் வாய்ப்பு ரைபகினாவுக்கு கிட்டியுள்ளது.
சபலென்கா-ரைபகினா மோதல்:
இறுதி ஆட்டத்தில் சபலென்கா-ரைபகினா மோதுகின்றனா். இதில் சபலென்கா 8 முறையும், ரைபகினா 7 முறையும் வென்றுள்ளனா்.

குறிப்பாக டபிள்யுடிஏ ஃபைனல்ஸ், ஆஸி. ஓபனில் சபலென்காவை வீழ்த்தி பட்டம் வென்றிருந்தாா் ரைபகினா.
தொடர்புடையது
ஸ்டட்காா்ட் ஓபன் மகளிா் டென்னிஸ்: வாகை சூடினாா் எலனா ரைபகினா!

இறுதிச் சுற்றில் ஜேக் சின்னா்

அரையிறுதியில் மோதும் சபலென்கா - ரைபகினா

காலிறுதியில் சபலென்கா, ரைபகினா, கௌஃப்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


