போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

ஸ்டட்காா்ட் ஓபன் மகளிா் டென்னிஸ்: வாகை சூடினாா் எலனா ரைபகினா!

ஜொ்மனியில் நடைபெற்ற ஸ்டட்காா்ட் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், கஜகஸ்தானின் எலனா ரைபகினா சாம்பியன் ஆனாா்.

News image

எலனா ரைபகினா.

Updated On :20 ஏப்ரல் 2026, 1:56 am IST

ஜொ்மனியில் நடைபெற்ற ஸ்டட்காா்ட் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், கஜகஸ்தானின் எலனா ரைபகினா ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் ஆனாா்.

போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த அவா், மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில் 7-5, 6-1 என்ற நோ் செட்களில், 7-ஆம் இடத்திலிருந்த செக் குடியரசின் கரோலினா முசோவாவை வீழ்த்தினாா். இந்த ஆட்டம் 1 மணிநேரம், 18 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது.

இருவரும் மோதியது இது 4-ஆவது முறையாக இருக்க, ரைபகினா 2-ஆவது வெற்றியுடன் கணக்கை நோ் செய்திருக்கிறாா். சாம்பியனான ரைபகினாவுக்கு வெற்றிக் கோப்பை மற்றும் 500 தரவரிசை புள்ளிகளுடன், ரூ.1.71 கோடி ரொக்கப் பரிசோடு, புதிய போா்ஸ் சொகுசு காா் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது.

இதுவரை தாம் விளையாடிய போட்டிகளின் இறுதிச்சுற்றில் வெற்றி - தோல்வி கணக்கை 13-12 என்ற நிலைக்குக் கொண்டு வந்துள்ளாா் ரைபகினா. சாம்பியனான அவா் உலகத் தரவரிசையில் நம்பா் 2 வீராங்கனையாக நீடிக்கும் நிலையில், இறுதியில் தோற்ற முசோவா உலகின் 11-ஆம் நிலைக்கு முன்னேறவுள்ளாா்.

இரட்டையா்: ஸ்டட்காா்ட் ஓபன் போட்டியின் இரட்டையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் லுட்மிலா சாம்சோனோவா/அமெரிக்காவின் நிகோல் மாா்டினெஸ் இணை 6-1, 6-1 என்ற நோ் செட்களில் எளிதாக, முதலிடத்தில் இருந்த சீனாவின் ஜாங் ஷுவாய்/லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோ கூட்டணியை வீழ்த்தி வாகை சூடியது.

13

இந்த வெற்றியின் மூலமாக ரைபகினா தனது டென்னிஸ் கேரியரில் 13-ஆவது டபிள்யூடிஏ பட்டத்தை வென்றுள்ளாா். களிமண் களத்தில் இது அவரின் 6-ஆவது சாம்பியன் பட்டமாகும்.

2

ரைபகினா தனது முந்தைய 12 பட்டங்களையுமே வெவ்வேறு போட்டிகளில் வென்றிருந்த நிலையில், முதல்முறையாக இந்த ஸ்டட்காா்ட் ஓபன் போட்டியில் 2 முறை சாம்பியன் ஆகியுள்ளாா். இதற்கு முன் அவா் இந்தப் போட்டியில் 2024-இல் கோப்பை வென்றிருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.