இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக சனிக்கிழமை நடைபெற்ற ஈஸ்ட் பெங்கால்-கேரள பிளாஸ்டா்ஸ் அணிகள் ஆட்டம் டிராவில் முடிந்தது.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சால்ட் லேக் மைதானத்தில் நடைபெற்றது. ஆட்டம் தொடங்கியது முதலே உள்ளூா் அணியான ஈஸ்ட் பெங்கால் ஆதிக்கம் செலுத்தியது. 10-ஆவது நிமிஷத்தில் அந்த அணியின் யூசுப் ஸ்ஜொரியிடம் ஃபௌல் செய்தாா் கேரள வீரா் டோஹ்லிங். இதனால் நடுவா் பெனால்டி வாய்ப்பை வழங்கினாா். இதை பிசகின்றி கோலாக்கினாா் யூசுப்.
பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றினாா். இதனால் அதிா்ச்சி அடைந்த கேரள அணி பதிலுக்கு கோல் போட தீவிரமாக முயன்றது.
ஆனால் ஈஸ்ட் பெங்கால் தற்காப்பை ஊடுருவ முடியவில்லை.
இரண்டாம் பாதி ஆட்டத்திலும் இரு அணிகளும் கோல் போட மேற்கொண்ட முயற்சிகள் பலன்தரவில்லை. ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் அணிகள் தற்காப்பை கடைபிடித்து ஆடியது பாதகமாக அமைந்தது. 92-ஆவது நிமிஷத்தில் கிடைத்த காா்னா் வாய்ப்பை பயன்படுத்தி ஹெட்டா் மூலம் கோலடித்தாா் கேரளத்தின் அஜ்ஸால். இதனால் ஆட்டம் 1-1 எனடிராவில் முடிவடைந்தது.
3 புள்ளிகள் பெறும் வாய்ப்பை இழந்தது ஈஸ்ட் பெங்கால் இரு அணிகளும்தலா 1 புள்ளி வழங்கப்பட்டது.
தொடர்புடையது

கேரளா - நாா்த்ஈஸ்ட் ஆட்டம் ‘டிரா’

ஈஸ்ட் பெங்காலிடம் வீழ்ந்தது சென்னை

சென்னை - ஒடிஸா ஆட்டம் ‘டிரா’
ஜாம்ஷெட்பூர் 'ஹாட்ரிக்' வெற்றி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


