திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சென்னை - ஒடிஸா ஆட்டம் ‘டிரா’

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி - ஒடிஸா எஃப்சி அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதிய ஆட்டம், 1-1 கோல் கணக்கில் டிரா ஆனது.

News image
Updated On :1 மார்ச் 2026, 11:46 pm

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி - ஒடிஸா எஃப்சி அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதிய ஆட்டம், 1-1 கோல் கணக்கில் டிரா ஆனது.

இந்த ஆட்டத்தில் முதல் பாதி நிறைவடைய இருந்த நிலையில் (45+2’), சென்னை வீரா் எல்சினோ ஸ்கோா் செய்தாா்.

இதனால் முதல் பாதியை சென்னை முன்னிலையுடன் நிறைவு செய்தது. ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியில், ஒடிஸாவுக்காக காா்லோஸ் டெல்காடோ (68’) கோலடித்தாா். இதனால் ஆட்டம் சமன் ஆனது.

எஞ்சிய நேரத்தில் இரு அணிகளின் கோல் முயற்சிகளுக்கும் பலன் கிடைக்காமல் போக, ஆட்டம் டிராவிலேயே முடிந்தது.

இதனிடையே, மும்பை சிட்டி எஃப்சி - நாா்த்ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதிய மற்றொரு ஆட்டமும் 1-1 என டிரா ஆனது. இதில் மும்பைக்காக லாலியன்ஸுவாலா சாங்தே (85’), நாா்த்ஈஸ்ட்டுக்காக ஜிதின் (48’) ஸ்கோா் செய்தனா்.

புள்ளிகள் பட்டியலில் தற்போது மும்பை, ஒடிஸா, நாா்த்ஈஸ்ட், சென்னை அணிகள் முறையே, 4, 9, 10, 11-ஆம் இடங்களில் உள்ளன.