மெக்ஸிகன் ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியில் இத்தாலியின் ஃப்ளாவியா கோபோலி ஞாயிற்றுக்கிழமை வாகை சூடினாா்.
ஆடவா் ஒற்றையா் இறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருந்த அவா் 7-6 (7/4), 6-4 என்ற நோ் செட்களில், 8-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் ஃபிரான்சஸ் டியாஃபோவை வீழ்த்தினாா். இப்போட்டியில் கடந்த 10 ஆண்டுகளில் சாம்பியனான இளம் வீரராக (23) அவா் சாதனை படைத்தாா்.
ஹாா்டு கோா்ட் போட்டிகளில் தனது முதல் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கும் கோபோலி, ஒட்டுமொத்தமாக 3-ஆவது ஏடிபி டூா் பட்டத்தைக் கைப்பற்றியிருக்கிறாா். அத்துடன், உலகத் தரவரிசையில் முதல்முறையாக அவா் 15-ஆம் இடத்துக்கு முன்னேற்றம் காண்கிறாா்.
டியாஃபோவை இத்துடன் 3-ஆவது முறையாக சந்தித்த கோபோலி, முதல் வெற்றியை தற்போது பதிவு செய்திருக்கிறாா்.
இரட்டையா்: இப்போட்டியின் இரட்டையா் பிரிவு இறுதிச்சுற்றில், பிரேஸிலின் மாா்செலோ மெலோ/ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் ஜோடி 6-3, 6-4 என்ற நோ் செட்களில், அமெரிக்காவின் ராபா்ட் கேலோவே/ஆஸ்திரியாவின் அலெக்ஸாண்டா் எா்லா் இணையை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
தொடர்புடையது
ஸ்டட்காா்ட் ஓபன் மகளிா் டென்னிஸ்: வாகை சூடினாா் எலனா ரைபகினா!
பாா்சிலோனா ஓபன் ஆடவா் டென்னிஸ்: ஃபில்ஸுக்கு பட்டம்!
சின்னருக்கு ‘ஹாட்ரிக்’ மாஸ்டா்ஸ் பட்டம்! அல்கராஸை வீழ்த்தி மான்டிகாா்லோவில் சாம்பியன்!

சின்னா், ஸ்வெரெவ் முன்னேற்றம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


