ஸ்பெயினில் நடைபெற்ற பாா்சிலோனா ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியில், பிரான்ஸின் ஆா்தா் ஃபில்ஸ் 6-2, 7-6 (7/2) என்ற நோ் செட்களில், ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவை வீழ்த்தி, வாகை சூடினாா். அவரின் கேரியரில் இது 4-ஆவது பட்டமாகும்.
காயம் காரணமாக 8 மாதங்கள் ஓய்வில் இருந்த நிலையில், அதிலிருந்து மீண்டு வந்த பிறகு ஃபில்ஸ் வென்ற முதல் கோப்பை இது. இந்த வெற்றியின் மூலமாக, உலகத் தரவரிசையில் 25-ஆவது இடத்துக்கு முன்னேறும் ஃபில்ஸ், பிரான்ஸ் வீரா்கள் வரிசையில் நம்பா் 1 வீரா் ஆகிறாா்.
ஷெல்டன் வெற்றி: ஜொ்மனியில் நடைபெற்ற பிஎம்டபிள்யூ ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியில், அமெரிக்காவின் பென் ஷெல்டன் 6-2, 7-5 என்ற செட்களில், இத்தாலியின் ஃப்ளாவியோ கோபோலியை வென்று சாம்பியன் ஆனாா். அவா் கேரியரில் இது 5-ஆவது பட்டமாகும்.
களிமண் தரைப் போட்டிகளில் 2002-க்குப் பிறகு சாம்பியன் ஆன முதல் அமெரிக்க வீரராக ஷெல்டன் பெருமை பெற்றாா். அத்துடன் 500 புள்ளிகள் கொண்ட ஏடிபி போட்டிகளில் 3 முறை சாம்பியன் ஆன முதல் அமெரிக்கா் என்ற சாதனையும் படைத்தாா்.
தொடர்புடையது
ஸ்டட்காா்ட் ஓபன் மகளிா் டென்னிஸ்: வாகை சூடினாா் எலனா ரைபகினா!

சாா்ல்ஸ்டன் ஓபன்: கலின்ஸ்கியா, பென்கிக் முன்னேற்றம்

அரையிறுதியில் மோதும் சபலென்கா - ரைபகினா

மெக்ஸிகன் ஓபன் டென்னிஸ்: கோப்பை வென்றாா் கோபோலி!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

