ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நாக் அவுட் சுற்றுக்கு முதல்முறையாக முன்னேறி, வரலாறு படைத்தது தென்னாப்பிரிக்கா!

கால்பந்து உலகக் கோப்பையில் வரலாறு படைத்த தென்னாப்பிரிக்கா குறித்து...

South Africa's Thapelo Maseko (12) celebrates after scoring his side's first goal during the World Cup Group A soccer match between South Africa and South Korea in Guadalupe, near Monterrey, Mexico, Wednesday, June 24, 2026. (AP Photo/Moises Castillo)

கோல் அடித்த மகிழ்ச்சியில் தென்னாப்பிரிக்க வீரர்கள். - படம்: ஏபி

Published On :25 ஜூன் 2026, 3:17 pm IST

தென்னாப்பிரிக்க அணி கால்பந்து உலகக் கோப்பையில், முதல்முறையாக நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி வரலாறு படைத்தது.

மெக்சிகோவின் மான்டேரி திடலில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தென் கொரியாவும் தென்னாப்பிரிக்காவும் மோதின. இந்தப் போட்டியின் முதல் பாதி இரு அணிகளுமே கோல் அடிக்காமல் 0-0 என சமனில் முடிவடைந்தது.

இரண்டாம் பாதியில் 63ஆவது நிமிஷத்தில் தபேலோ மாசெகோ கோல் அடித்து 1-0 என தென்னாப்பிரிக்க அணியை முன்னிலைப் பெற உதவினார். இறுதிவரை போராடிய தென் கொரொயா ஒரு கோல் கூட அடிக்காமல் தோல்வியுற்றது.

முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா 0-2 என தோல்வியுற்றது. இரண்டாவது போட்டியில் கடைசி நேரத்தில் கோல் அடித்து 1-1 என சமன்படுத்தியது.

கடைசி போட்டியில் வென்று 4 புள்ளிகளைப் பெற்று நாக் அவுட் சுற்றுக்கு முதல்முறையாக முன்னேறி வரலாறு படைத்துள்ளது. ஃபிஃபாவினால் 40 ஆண்டுகள் தடைசெய்யப்பட்டைந்த அணி 1992ல் அறிமுகமாகிறது.

நூல் இழையில் 1994 உலகக் கோப்பையைத் தவறவிட்ட தென்னாப்பிரிக்கா 1998, 2002, 2010 ஆகிய உலகக் கோப்பைகளில் லீக் சுற்றுடன் தோல்வியுற்றது. பின்னர், 16 ஆண்டுகளுக்குப் பிறகு 2026 உலகக் கோப்பையில் தேர்வானது.

இந்த நிலையில், முதல்முறையாக நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. தெ.ஆ. ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

Summary

South Africa reaches World Cup knockout round for 1st time with 1-0 win over South Korea, Making history for South Africa

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.