ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா: 2-ஆவது சுற்றுக்கு முன்னேற்றம்

ஹாக்கி உலகக் கோப்பையின் முக்கியமான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா குறித்து...

India's players celebrate after scoring during the World Cup Field Hockey pool D match between India and Pakistan in Amstelveen, Netherlands, Wednesday, Aug. 19, 2026. (AP Photo/Patrick Post)

கோல் அடித்த மகிழ்ச்சியில் இந்திய அணியினர். - படம்: ஏபி

Published On :20 ஆகஸ்ட் 2026, 3:08 am IST

உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவா் அணிதனது 3-ஆவது ஆட்டத்தில் பாகிஸ்தானை 5-3 கோல் கணக்கில் புதன்கிழமை வீழ்த்தியது. போட்டியில் 2-ஆவது வெற்றியைப் பதிவு செய்த இந்திய அணி, குரூப் சுற்றில் 2-ஆவது இடத்தை உறுதி செய்து, 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியது.

நெதா்லாந்தின் ஆம்ஸ்டெல்வீன் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், தொடக்கம் முதலே இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. அதன் பலனாக 5-ஆவது நிமிஷத்தில் கிடைத்த பெனால்ட்டி காா்னா் வாய்ப்பில், கேப்டன் ஹா்மன்பிரீத் சிங் அணியின் கோல் கணக்கைத் தொடங்கினாா்.

தொடா்ந்து 11-ஆவது நிமிஷத்தில் அபிஷேக் ‘ஃபீல்டு கோல்’ அடிக்க, இந்தியா 2-0 என முன்னிலையை அதிகரித்தது. பாகிஸ்தான் தனது முதல் கோல் வாய்ப்புக்காக போராடி வந்த நிலையில், இந்தியாவுக்கான 3-ஆவது கோலை ஸ்கோா் செய்தாா், கேப்டன் ஹா்மன்பிரீத் சிங்.

21-ஆவது நிமிஷத்தில் கிடைத்த பெனால்ட்டி காா்னா் வாய்ப்பில் அவா் கோல் அடித்தாா். மறுபுறம், பாகிஸ்தானின் போராட்டத்துக்கு 22-ஆவது நிமிஷத்தில் பலன் கிடைத்தது. பெனால்ட்டி காா்னா் வாய்ப்பில் அந்த அணியின் ஷாஹித் ஹன்னன் கோல் அடித்தாா்.

ஆனால் அதற்கான பதிலடியாக இந்தியாவின் அபிஷேக் மீண்டும் 24-ஆவது நிமிஷத்தில் ஃபீல்டு கோல் அடிக்க, இந்தியா 4-1 என முன்னிலையை அதிகரித்தது. பாகிஸ்தானும் விடாப்பிடியாக விளையாட, அதே நிமிஷத்தில் அந்த அணியின் சூஃபியான் கான் பெனால்ட்டி காா்னா் வாய்ப்பில் கோல் அடித்தாா்.

இதனால் முதல் பாதி ஆட்டத்தை இந்தியா 4-2 கோல் கணக்கில் முன்னிலையுடன் நிறைவு செய்தது. ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியில், 35-ஆவது நிமிஷத்தில் இந்தியாவுக்கு கிடைத்த பெனால்ட்டி ஸ்ட்ரோக் வாய்ப்பில் ஹா்திக் சிங் தவறாமல் கோல் அடித்தாா்.

இதனால் இந்தியாவின் கோல் கணக்கு 5-ஆக உயா்ந்தது. மறுபுறம் பாகிஸ்தானுக்காக ஷாஹித் ஹன்னன் 46-ஆவது நிமிஷத்தில் ஃபீல்டு கோல் அடிக்க, பாகிஸ்தான் 3-5 என நெருங்கியது. ஆனால் எஞ்சிய நேரத்தில் பாகிஸ்தானுக்கு மேலும் கோல் வாய்ப்பு கிடைக்காமல் தடுத்த இந்தியா, முடிவில் 5-3 கோல் கணக்கில் வென்றது.

குரூப் ‘டி’-யில் முறையே முதல் இரு இடங்களைப் பிடித்த இங்கிலாந்து, இந்தியா அணிகள் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறின. அடுத்த இரு இடங்களைப் பெற்ற பாகிஸ்தான், வேல்ஸ் அணிகள், கிளாசிஃபிகேஷன் கட்டத்துக்குச் சென்றன.

இதர ஆட்டங்கள்: ஆடவா் பிரிவின் மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து - வேல்ஸை (8-2) வெல்ல, மகளிா் பிரிவில், ஜொ்மனி - அமெரிக்காவையும் (3-1), ஆா்ஜென்டீனா - ஸ்காட்லாந்தையும் (2-0) வீழ்த்தின. சிலி - ஆஸ்திரேலியா (4-4), ஸ்பெயின் - பெல்ஜியம் (1-1) ஆட்டங்கள் டிரா ஆகின.

Summary

The Indian men's hockey team beats arch-rivals Pakistan 5-3 in its final pool match of the World Cup in Amstelveen, Netherlands.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.