ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஹைதியை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது மொராக்கோ!

நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய மொராக்கோ அணி குறித்து...

Soufiane Rahimi and Gessime Yassine help Morocco rally to beat Haiti 4-2

கோல் அடித்த மகிழ்ச்சியில் மொராக்கோ அணியினர். - படம்: ஏபி

Published On :25 ஜூன் 2026, 3:49 pm IST

அமெரிக்காவின் அட்லாண்டா அரங்கத்தில் நடைபெற்ற போட்டியில் மொராக்கோவும் ஹைதியும் மோதின. இந்தப் போட்டியில் மொராக்கோ 4-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியுடன் நாக் அவுட் சுற்றுக்கு மொராக்கோ அணி தேர்வாகியுள்ளது. முன்னதாக, 2022 உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆப்பிரிக்க நாடாக மொராக்கோ சாதனை படைத்திருந்தது.

அட்லாண்டா அரங்கத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மொராக்கோ சார்பாக அஷ்ரஃப் ஹகிமி 39ஆவது நிமிஷத்திலும் இஸ்மாயில் சைபாரி 45+1ஆவது நிமிஷத்திலும் கோல் அடித்தார்கள்.

ஹைதி அணிக்கு 10ஆவது நிமிஷத்தி ஓன் கோல் கிடைக்க, 43ஆவது நிமிஷத்தில் வில்சன் இசிடோர் கோல் அடித்தார். இதனால், முதல் பாதியில் 2-2 என சமநிலையில் இருந்தது.

இரண்டாம் பாதியில் மொராக்கோவின் 78ஆவது நிமிஷத்தில் சூஃபியான் ரஹிமி, 89ஆவது நிமிஷத்தில் ஜெஸ்ஸிம் யாசின் கோல் அடித்து அசத்தினார். இறுதியில் மொராக்கோ 4- 2 என வென்றது.

குரூப் சி பிரிவில் மொராக்கோ, பிரேசில் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன. ஹைதி உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது.

Summary

Soufiane Rahimi and Gessime Yassine help Morocco rally to beat Haiti 4-2

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.