மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்தோழமை கட்சிகளுடன் அமைந்திருக்கும் கூட்டணி இயற்கையானது: நிர்மல்குமார்இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீதான தடை நீக்கம்!இப்படி செய்வதற்கு மு.க. ஸ்டாலினுக்கு வெட்கமாக இல்லையா? நிர்மல்குமார்நீங்கள் கொடுத்த பதவி வேண்டாம்; பழனிசாமிக்கு எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் கடிதம்
/

கத்தார் - ஸ்விட்சர்லாந்து ஆட்டம் டிராவில் முடிந்தது!

கத்தார் - ஸ்விட்சர்லாந்து அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டி டிராவில் முடிந்தது.

News image

ஸ்விஸ் அணியின் பிரீல் எம்போலோ மற்றும் கத்தார் கேப்டன் பௌலேம் கூக்கி - AP

Updated On :14 ஜூன் 2026, 5:23 pm IST

கத்தார் - ஸ்விட்சர்லாந்து அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டி டிராவில் முடிந்தது.

ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பைத் தொடரில் குரூப் - பி அணிகளுக்கான ஆட்டத்தில் கத்தார் - ஸ்விட்சர்லாந்து அணிகள் மோதின.

ஆட்டம் தொடங்கி 13வது நிமிடம் முதல் ஸ்விஸ் அணி ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. சுவிஸ் அணியின் ரெமோ ஃப்ரூலரிடம் கத்தார் கோல்கீப்பர் மமூத் அபுனாடா செய்த ஃபவுலால் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பிரீல் எம்போலோ கோலாக மாற்றினார்.

ஆட்டத்தின் பெரும்பகுதியை ஆதிக்கம் செலுத்திய ஸ்விஸ் முதல் கோலுக்குப் பின்னர் மேலும் முன்னேற முடியாமல் தவித்தது. ஸ்விஸ் அணியின் டான் என்டோயே மற்றும் ரூபன் வர்காஸ் ஆகியோர் கோல் அடிக்கும் முக்கிய வாய்ப்புகளைத் தவறவிட்ட நிலையில், மைக்கேல் ஏபிஷரின் அடித்த ஷாட் கோல் கோட்டில் தடுக்கப்பட்டது.

கத்தார் அணி அணையாத வெப்பத்திலும் ஆட்டத்தைக் கட்டுப்படுத்திச் சென்றது. அவர்களின் விடாமுயற்சிக்கு இறுதி நிமிடங்களில் பலன் கிடைத்தது. ஹோமம் அல் அமின் அடித்த கிராஸ் பந்தை கேப்டன் பௌலேம் கூக்கி தலையால் அடித்து கோலாக்கினார்.

இதனால், கடைசி நிமிடங்களில் ஆட்டம் சமனாகி டிராவில் முடிந்தது. மேலும், இத்தொடரில் கத்தார் அணி முதல் புள்ளியைப் பெற்றது.

Summary

The Qatar-Switzerland match ended in a draw!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.