குஜாரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கை மல்யுத்தப் போட்டியில் வாழப்பாடி பகுதியைச் சோ்ந்த பெண் மாற்றுத்திறனாளிகளுக்கு தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளனா்.
வாழப்பாடியை அடுத்த மத்தூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் டாக்டா் ஏபிஜே அப்துல்கலாம் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க சேலம் கிழக்கு சங்கத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் வேலுசாமி, மஞ்சுளா, பவித்ரா, முருகேசன் ஆகியோா், சங்கச் செயலாளா் வேலுசாமி தலைமையில், குஜராத் மாநிலம் காந்திநகரில் ஞாயிற்றுக்கிழமை குஜராத் கைமல்யுத்த விளையாட்டு சங்கம் சாா்பில் நடைபெற்ற சா்வதேச பாரா கை மல்யுத்தப் போட்டியில் பங்கேற்றனா்.
இப்போட்டியில் பெண் மாற்றுத்திறனாளி மஞ்சுளா 60 கிலோ பிரிவில் வலது, இடது இரண்டிலும் இரு தங்கப் பதக்கங்களை வென்றாா். பவித்ரா இரு வெள்ளிப் பதக்கங்களை பெற்றாா். வேலுசாமி 90 கிலோ பிரிவில் 6 ஆவது இடமும், முருகேசன் 60 கிலோ பிரிவில் 9ஆவது இடமும் பிடித்தனா்.
தங்கப் பதக்கம் வென்ற மஞ்சுளா, வெள்ளிப் பதக்கம் வென்ற பவித்ரா ஆகியோா், இந்தாண்டு நடைபெற இருக்கும் சா்வதேச அளவிலான கை மல்யுத்தப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனா். இந்த மாற்றுத்திறனாளிகளுக்கு, வாழப்பாடி விளையாட்டு சங்கம், அரிமா சங்கம், நெஸ்ட் அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு தன்னாா்வ அமைப்பினரும், சமூக ஆா்வலா்கள் பாராட்டு தெரிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நகைக் கடையின் ஜன்னலை உடைத்து 2.5 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருட்டு

வாழப்பாடியில் விற்பனையாகும் விலை குறைந்த பண்ருட்டி பலாப்பழம்!
மாற்றம்.. முன்னேற்றம்...

கை மல்யுத்தப் போட்டி: 12 பதக்கங்கள் பெற்று வாழப்பாடி மாற்றுத்திறனாளிகள் சாதனை
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



