ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கல்வி அமைப்பு தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்: அபினவ் பிந்த்ரா

இந்திய துப்பாக்கி சுடுதல் முன்னாள் நட்சத்திரம் அபினவ் பிந்த்ராவின் நீட் போராட்டம் பற்றிய பதிவு குறித்து...

Abhinav Bindra

அபினவ் பிந்த்ரா - படம்: எக்ஸ் / அபினவ் பிந்த்ரா

Published On :23 ஜூலை 2026, 3:11 pm IST

ஒலிம்பிக்ஸில் இந்தியாவின் தனிநபர் பிரிவில் முதல் தங்கம் வென்ற துப்பாக்கி சுடும் முன்னாள் வீரர் அபினவ் பிந்த்ரா தனது எக்ஸ் பக்கத்தில், நீட் போராட்டம் பற்றி “கல்வி அமைப்பு என்பது தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டுவதாக இருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலகக் கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் (சிஜேபி) தில்லியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

நீட் தேர்வு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள், மாணவிகள் மீது தில்லி காவல்துறையினர் தடியடி நடத்தியது பலரையும் முகம்சுழிக்க வைத்தது.

திரைப் பிரபலங்களைத் தொடர்ந்து விளையாட்டு வீரர்களும் தற்போது தங்களது ஆதரவை மாணவர்களுக்கு வழங்கி வருகிறார்கள்.

ஒலிம்பிக்ஸில் இந்தியாவின் தனிநபர் பிரிவில் முதல் தங்கம் வென்ற துப்பாக்கி சுடும் முன்னாள் வீரர் அபினவ் பிந்த்ரா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

என்னை நான் எப்போதுமே அரசியல்வாதியாகவே கருதியதில்லை. ஆனால், நாம் எந்தக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் சில பிரச்னைகள் நமக்குச் சொதமானதென நம்புகிறேன். அதில் கல்வியும் ஒன்று.

ஒரு நாட்டினை மதிப்பிடும்போது அது பொருளாதாரத்தையோ அல்லது அதன் சாதனைகளில் மட்டுமே இருப்பதில்லை; ஆனால், இளைஞர்களுக்கு எவ்வளவு வாய்ப்பை உருவாக்குகிறோம் என்பதில் இருக்கிறது. கல்வி அமைப்பு தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும். தகுதிப் பரிசுகள் மற்றும் ஒன்றைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் நாட்டின் முக்கியமான பலங்கள்.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து கல்வி அமைப்பு பலமானதாக மாற்ற வேண்டுமென நம்புகிறேன். அப்போதுதான் அது அடுத்த தலைமுறைகளுக்கான புதிய வாய்ப்புகள், நவீனங்கள் மற்றும் நம்பிக்கையை தரும் மூலாதாரமாக இருக்க முடியும் எனக் கூறியுள்ளார்.

Summary

Education system should inspire confidence: Abhinav Bindra amid NEET protests

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.