ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நீட் போராட்ட வழக்கு ரத்து; மத்திய அரசு பதிலளிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம்: சிஜேபி எச்சரிக்கை

நீட் போராட்டம் தொடர்பான வழக்குகள் ரத்து செய்வது குறித்து மத்திய அரசு பதிலளிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என சிஜேபி எச்சரிக்கை விடுத்துள்ளது பற்றி...

Ashutosh Ranga

அசுதோஷ் ரங்கா - படம் - பிடிஐ

Published On :28 ஜூலை 2026, 9:41 pm IST

நீட் போராட்டம் தொடர்பான வழக்குகள் ரத்து செய்வது குறித்து மத்திய அரசு பதிலளிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கரப்பான் பூச்சி ஜனதா கட்சி செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா இன்று (ஜூலை 28) தெரிவித்துள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக தில்லியின் ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திய போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. அவர்களின் கோரிக்கையை ஏற்று மத்திய கல்வித்துறை அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலகினார்.

இந்தப் போராட்டத்தின் போது, சிஜேபி ஆதரவாளர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதோடு, கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதன் பிறகு போராட்டம் நாடு முழுவதும் வெடித்தது. இதனால், நாடு முழுவதும் போராட்டக்காரர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதைத் தொடர்ந்து, நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற குற்றப் பின்னணி இல்லாத 18 வயதுக்குக் குறைவான மாணவர்களை விடுதலை செய்யவும், போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து அசுதோஷ் ரங்கா பேசியதாவது:

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு மத்திய அரசு மௌனம் காத்தது வெட்கக் கேடானது. ஏனெனில், ஜூலை 25 அன்று, தற்போதுள்ள அனைத்து முதல் தகவல் அறிக்கைகளும் திரும்பப் பெறப்படும் என்றும், இனிமேல் புதிய முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்படாது என்றும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்த கோரிக்கையை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். இது குறித்து விரைவில் எங்களுக்குத் தகவல் கிடைக்கவில்லை என்றால், நாங்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட நேரிடும்.

நீங்கள் எங்களைக் கரப்பான் பூச்சிகள் என்றும், சாக்கடை என்றும் அழைத்தீர்கள்; நினைவிருக்கட்டும், இந்தக் கரப்பான் பூச்சிகள்தான் சாக்கடையிலிருந்து ஊர்ந்து வந்து, உங்கள் அமைச்சர்களில் ஒருவரைப் பதவி விலகும்படி கட்டாயப்படுத்தின என்று அசுதோஷ் ரங்கா தெரிவித்துள்ளார்.

Summary

Ashutosh Ranga, spokesperson for the 'Cockroach Janata Party', stated today (July 28) that they would resume protests if the Central Government fails to respond regarding the withdrawal of cases related to the NEET agitation.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.