ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சீனா ஓபன்: டோக்கியோ சாம்பியனிடம் பிவி சிந்து தோல்வி!

இந்திய பாட்மின்டன் வீராங்கனை பிவி சிந்து சீனா ஓபனில் தோல்வியுற்றது குறித்து...

Japan Open 2026: PV Sindhu beats Akane Yamaguchi in Tokyo to end title drought

பிவி சிந்து - IANS

Published On :23 ஜூலை 2026, 2:34 pm IST

இந்திய பாட்மின்டன் வீராங்கனை பிவி சிந்து சீனா ஓபனில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் சீன வீராங்கனையிடம் தோல்வியுற்றார்.

முன்னதாக, ஜப்பான் ஓபனில் பிவி சிந்து சாம்பியன் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக கோப்பை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளார்.

காலிறுதிக்கு முந்தைய சுற்றான இதில் பிவி சிந்து 21-16, 20-22, 18-21 என்ற கேம்களில் சீன வீராங்கனை சென் யூஃபியிடம் தோல்வியடைந்தார்.

இந்தப் போட்டி ஒரு மணி நேரம் 30 நிமிஷங்கள் நீடித்தது. முதல் கேமிலும் 7-13லிருந்து 16-16 என முன்னேறி, பின்னட் முதல் கேமை வென்றார். பின்னர், அடுத்த கேம்களிலும் இறுதிவரை போராடி தோல்வியுற்றார்.

30 வயதான பிவி சிந்து ஜப்பான் ஓபனில் நீண்ட மாதங்களான கோப்பை வறட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். நல்ல மனநிலையில் இந்தத் தொடருக்கு வந்திருந்தாலும் போராடி தோல்வியுற்றார்.

டோக்யோ ஒலிம்பிக்ஸில் (2021) சென் யூஃபி தங்கம் வென்றிருந்தார். இரண்டாவது கேமில் 16-20 என இருந்து, 22-20 என மாற்றி வென்றார்.

இறுதி கேமிலும் போட்டி சமமாகவே இருந்தது. இதில் 17-17 என இருந்தது. அங்கிருந்து சென் யூஃபி வென்றார்.

Summary

P V Sindhu bows out early from China Open

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.