ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நேர் கேம்களில் வென்ற பிவி சிந்து..! காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தேர்வு!

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் இரண்டாம் சுற்றில் வென்ற பிவி சிந்து குறித்து...

PV Sindhu

பிவி சிந்து (கோப்புப் படம்) - ஏஎன்ஐ

Published On :19 ஆகஸ்ட் 2026, 7:43 pm IST

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் மகளிர் ஒற்றையர் பிரிவின் இரண்டாம் சுற்றில் பிவி சிந்து நேர் கேம்களில் வென்று மூன்றாவது சுற்றுக்குத் தேர்வாகி அசத்தியுள்ளார்.

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஆக.17 முதல் 23ஆம் தேதி வரை புதுதில்லியில் நடைபெற இருக்கின்றன. கடந்த 2009 ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக இந்தியா உலக சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்துகிறது.

முதல் போட்டியில் பிவி சிந்து சோபியா நோபலை 21- 7, 21-11 என நேர் கேம்களில் வென்றிருந்தார். தற்போது இரண்டாவது சுற்றில் கனடாவின் வென் யூ ஜாங் உடன் மோதினார்.

இந்தப் போட்டியில் பிவி சிந்து 21-16, 21-17 என நேர் கேம்களில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றான ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

அடுத்த சுற்றில் உலகின் மூன்றாம் நிலை வீராங்கனையுடன் பலப்பரீட்சையில் ஈடுபடவிருக்கிறார்.

வெற்றிக்குப் பிறகு ரசிகர்களுக்கும் குட்டி ரசிகைகளுக்கும் பிவி சிந்து ஆட்டோகிராப் அளித்தார். அரங்கில் இருந்த பலரும் பிவி சிந்துவிற்கு உற்சாகத்தை அளித்தார்கள்.

Summary

PV Sindhu wins in straight games! Advances to the third round!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.