ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

உலக சாம்பியன்ஷிப்: அறிமுக போட்டியில் உனாட்டி ஹூடா த்ரில் வெற்றி!

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் அறிமுக போட்டியில் 18 வயதான இந்திய வீராங்கனை உனாட்டி ஹூடாவின் வெற்றி குறித்து...

Unnati Hooda

உனாட்டி ஹூடா - படம்: எக்ஸ் / பிஏஐ மீடியா.

Published On :18 ஆகஸ்ட் 2026, 4:34 pm IST

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய பாட்மின்டன் வீராங்கனை உனாட்டி ஹூடா (18 வயது) தனது அறிமுக போட்டியில் த்ரில் வெற்றி பெற்றுள்ளார்.

முன்னதாக, இந்தியாவின் பிவி சிந்து முதல் சுற்றில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிய நிலையில், மற்றுமொரு இந்திய வீராங்கனையும் அடுத்த சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஆக.17 முதல் 23ஆம் தேதி வரை புது தில்லியில் நடைபெற இருக்கின்றன. கடந்த 2009 ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக இந்தியா உலக சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்துகிறது.

இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை உனாட்டி ஹூடாவும் மியான்மரின் தேத் தார் துசாரும் மோதினார்கள்.

இந்தப் போட்டியில் உனாட்டி ஹூடா 22-20, 21-16 என்ற நேர் கேம்களில் வென்று அசத்தினார். இந்தப் போட்டி 49 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தன.

முதல் கேமிற்கு 21 நிமிஷங்களும் இரண்டாவது கேமிற்கு 28 நிமிஷங்களும் நேரமெடுத்தன. நாளை நடைபெற இருக்கும் அடுத்த சுற்றில் உனாட்டி ஹூடா கனடா வீராங்கனை மிஷெல் லி உடன் மோதுகிறார்.

Summary

Indian badminton women player Unnati Hooda won first round in World Championships

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.