ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மகளுக்காக அரசுப் பணியைக் கைவிட்ட உனாட்டி ஹூடாவின் தந்தை..! பயிற்சியாளராகவும் பங்களிப்பு!

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் அறிமுக போட்டியில் வென்ற இளம் வீராங்கனை உனாட்டி ஹூடா அளித்த பேட்டி குறித்து...

Unnati Hooda, her father Upkar Hooda.

உனாட்டி ஹூடா, அவரது தந்தை உப்கார் ஹூடா. - படம்: இன்ஸ்டா / உனாட்டி ஹூடா.

Published On :18 ஆகஸ்ட் 2026, 5:37 pm IST

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் அறிமுக போட்டியில் வென்ற இளம் வீராங்கனை உனாட்டி ஹூடா அளித்த பேட்டியில், “எனது தந்தை எனக்காக வேலையை விட்டுவிட்டார்” எனக் கூறியுள்ளார்.

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஆக.17 முதல் 23ஆம் தேதி வரை புது தில்லியில் நடைபெற இருக்கின்றன. கடந்த 2009 ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக இந்தியா உலக சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்துகிறது.

இந்தப் போட்டியில் உனாட்டி ஹூடா 22-20, 21-16 என்ற நேர் கேம்களில் வென்று அசத்தினார். இந்தப் போட்டி 49 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தன. இந்த வெற்றிக்குப் பிறகு அவர் அளித்த பேட்டியில் பேசியிருப்பதாவது:

பாட்மின்டன் விளையாட நான் கட்டாயப்படுத்தப்படவில்லை. ஆனால், நிச்சயமாக எனது குடும்பம் மற்றும் தந்தையின் பங்களிப்பு அதிக அளவில் இருக்கிறது. எனக்காக எனது தந்தை (உப்கார் ஹூடா) அவரது வேலையை விட்டுவிட்டார்.

எனது தந்தை செய்த தியாகத்திற்கு என்னால் வார்த்தைகளால் பதில் அளிக்க முடியாது. எனக்குக் கிடைத்த குடும்பத்திற்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

கடந்த மூன்றாண்டுகளாக எனக்கு உதவி வரும் ரிலையன்ஸ் அறக்கட்டளைக்கும் நன்றி. எனது தந்தைதான் எனக்கு பயிற்சியாளராகவும் இருக்கிறார்.

அறிமுக உலக சாம்பியன்ஷிப்பில் விளையாடியது சிறப்பானதாக இருந்தது. அடுத்த போட்டியில் கவனம் செலுத்துகிறேன். எனது நூறு சதவிகித உழைப்பையும் கொடுக்க வேண்டும். அத்துடன் போட்டியை மகிழ்ச்சியுடன் விளையாட வேண்டும்.

ஆயுஷ் ஷெட்டி எனக்கு சிறந்த நண்பர். உலகின் நம்.1 வீரரை அவர் வீழ்த்தி பலருக்கும் உத்வேகம் அளித்துள்ளார். யார் வேண்டுமானாலும் தோற்கலாம் வெற்றி பெறலாம் என்ற நிலை இருக்கிறது. அதனால், நம்மை நம்புவது மட்டுமே ஒரே வழி.

பொறுமையாக இருப்பதே முக்கியமானது. அதை மட்டும்தான் நான் நினைவில் வைத்திருக்கிறேன். இன்றும்கூட அதையேதான் செய்தேன். களத்தில் பின்பகுதியில் என்னை தயார்படுத்திக்கொண்டது உதவியது.

எனது கொந்தளிப்பை கட்டுப்படுத்த வேண்டும். சில நேரங்களில் காற்றின் அலைதல் கடினமாக இருக்கும். முதல் பாதியில் நன்றாக விளையாடினேன். கடைசி நேரத்தில் சில தவறுகளைச் செய்தேன். ஆனால், ஒட்டுமொத்தமாக நன்றாவே விளையாடினேன். நாளைய போட்டியில் ஆர்வத்துடன் இருக்கிறேன் எனக் கூறினார்.

உப்கார் ஹூடா முன்னாள் பல்கலைக்கழக அளவிலான பாட்மின்டன் வீரர். அவர் தனது அரசுக் கல்லூரி வேலையை, போட்டிகளுக்காக மகளுடன் பயணிப்பதற்காகவே விட்டுவிட்டார். பர்வேஷ் குமாரிடம் பயிற்சி பெற்றாலும் மகளுக்கு இவரே தற்போது பயிற்சியாளராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Unnati Hooda credits her father-cum-coach Upkar Hooda for her rise in badminton

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.