ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்... லக்‌ஷயா சென் வெற்றிக்கு தில்லி ரசிகர்கள் கோஷம்!

இந்தியாவின் நட்சத்திர பாட்மின்டன் வீரர் லக்‌ஷயா சென் வெற்றிக்கு தில்லி ரசிகர்களின் பாராட்டு குறித்து...

lakshya sen

லக்‌ஷயா சென் - படம்: எக்ஸ் / பிஏஐ மீடியா.

Published On :18 ஆகஸ்ட் 2026, 8:12 pm IST

இந்தியாவின் நட்சத்திர பாட்மின்டன் வீரர் லக்‌ஷயா சென் (25 வயது) உலக சாம்பியன்ஷிப்பின் முதல் சுற்றில் பெற்ற வெற்றிக்கு தில்லி ரசிகர்களின் கோஷம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஆக.17 முதல் 23ஆம் தேதி வரை புதுதில்லியில் நடைபெற இருக்கின்றன. கடந்த 2009 ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக இந்தியா உலக சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்துகிறது.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்‌ஷயா சென் - ஆஸ்திரியாவின் காலின்ஸ் வாலண்டைன் ஃபிலிமோன் இன்று மாலை 6.20 மணிக்கு மோதினார்கள்.

இந்தப் போட்டியில் லக்‌ஷயா சென் முதல் கேமை 16–21 என இழந்தார். பின்னர், ஆதிக்க மனதுடன் மீண்டெழுந்து 21–8, 21–4 என்ற கேம்களில் வென்றார்.

இந்த வெற்றியுடன் இரண்டாவது சுற்றுக்கு லக்‌ஷயா சென் முன்னேறியுள்ளார். 45 நிமிஷங்களில் முடிவடைந்த இந்தப் போட்டியில் தில்லி ரசிகர்கள் அவருக்கு வெகுவாகப் பாராட்டை வழங்கினார்கள்.

போட்டியில்போது தில்லி ரசிகர்கள், “ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் லக்‌ஷ்யா பாய் சூப்பர் ஸ்டார்” என கோஷமிட்டு அவரை உற்சாகப்படுத்தினார்கள்.

Summary

Twinkle twinkle little star, Lakshya bhai superstar The Delhi crowd chants

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.