ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

39 வயதில் 24 வயது வீரரை வீழ்த்தியிருக்கிறேன்: ஜோகோவிச் பெருமிதம்

விம்பிள்டனில் வரலாற்று வெற்றியைப் பெற்ற பிறகு ஜோகோவிச் பேசியிருப்பதாவது...

Novak Djokovic of Serbia celebrates winning against Felix Auger-Aliassime of Canada in their quarter-final men's singles match at the Wimbledon Tennis Championships in London, Tuesday, July 7, 2026. (AP Photo/Maja Smiejkowska)

வெற்றிக் களிப்பில் நோவக் ஜோகோவிச். - படம்: ஏபி

Published On :8 ஜூலை 2026, 7:57 pm IST

விம்பிள்டன் டென்னிஸ் காலிறுதிப் போட்டியில் நோவக் ஜோகோவிச் (39 வயது) 5 மணி நேரம் 15 நிமிஷங்கள் விளையாடி 24 வயதான வீரரை வீழ்த்தி, புதிய வரலாற்றைப் படைத்துள்ளார்.

விம்பிள்டனில் நீண்ட நேரம் விளையாடி வரலாற்று வெற்றியைப் பெற்ற பிறகு ஜோகோவிச், “என்னைவிட 15 ஆண்டுகள் குறைவான வயதுடையவருடன் போட்டியிட்டு வெல்ல முடிகிறது” எனக் கூறியுள்ளார்.

இந்தப் போட்டி விம்பிள்டன் காலிறுதி வரலாற்றிலேயே நீண்ட நேரம் விளையாடப்பட்டதாக சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் ஜோகோவிச் 7-6 (10), 3-6, 6-3, 6-7 (4), 7-6 (4) என்ற செட்களில் வீழ்த்தி அசத்தினார். இந்தப் போட்டிக்குப் பிறகு ஜோகோவிச் கூறியிருப்பதாவது...

இந்த மாதிரியான தருணங்களுக்காகத்தான் நான் டென்னிஸ் விளையாடுகிறேன். என்னைவிட 15 ஆண்டுகள் குறைவான வயதுடையவருடன் போட்டியிட முடிகிறது.

மிகவும் நெருக்கமான ஸ்கோருடன் அவர்களை வீழ்த்தவும் முடிகிறது. இந்த விதத்தில் இது மிகவும் நல்ல ஆச்சரியம். ஆனால், அதேவேளையில், எனக்கு என்மீது அதீத எதிர்பார்ப்பும் இருக்கிறது.

சின்னருடன் விளையாடுவது இறுதிப் போட்டியாக இருந்தால் நன்றாக இருக்கும். எனது உடல் நாளை எப்படி இருக்கப்போகிறதென்ற கவலை இல்லை. நான்காவது செட் வரும்போதே எனது குழந்தைகளை தூங்கச் சொன்னேன். அவர்கள் கேட்கவில்லை. ஆனால், மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏனெனில், இதுதான் எனது சிறந்த போட்டி என்றார்.

Summary

I have defeated a 24-year-old player at the age of 39: Djokovic proud.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.