
கால்பந்து உலகக் கோப்பையின் 3,000-ஆவது கோல்..! வரலாற்றில் இடம்பிடித்த இளம் ஆர்ஜென்டீன வீரர்!
கால்பந்து உலகக் கோப்பையில் 3,000-ஆவது கோல் அடித்த ஆர்ஜென்டீன வீரர் குறித்து...

கோல் அடித்த மகிழ்ச்சியில் என்ஜோ ஃபெர்னான்டஸ். - படம்: ஏபி
கால்பந்து உலகக் கோப்பையில் 3,000-ஆவது கோல் அடித்தவராக ஆர்ஜென்டீன இளம் வீரர் என்ஜோ ஃபெர்னான்டஸ் வரலாற்றில் இடம் பிடித்துள்ளார்.
ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் நேற்றிரவு ஆர்ஜென்டீன அணி எகிப்து அணியை 3-2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வென்றது. கடைசி 15 நிமிஷங்களில் 3 கோல்கள் அடித்த ஆர்ஜென்டீனா த்ரில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் 90 நிமிஷங்களில் இரு அணிகளுமே 2-2 என சமநிலையில் இருந்தது. பின்னர், ஸ்டாப்பேஜ் நேரத்தில் 90+2ஆவது நிமிஷத்தில் லொடாரோ மாட்ரினெஸ் அடித்த பந்தை என்ஜோ ஃபெர்னான்டஸ் தனது தலையினால் அசத்தலான கோல் அடிப்பார்.
இந்த கோல் அடித்த பிறகு ஆர்ஜென்டீனா 3-2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம் நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. அதில் ஸ்விட்சர்லாந்துடன் மோதவிருக்கிறது.
ஆர்ஜென்டீனாவின் மிட்ஃபீல்டர் என்ஜோ ஃபெர்னான்டஸ் (25 வயது) அடித்த கோல் கால்பந்து உலகக் கோப்பையின் 3,000ஆவது கோல் ஆக அடிக்கப்பட்டுள்ளது.
முதல் கோல் - லூசியன் லாரென்ட் (பிரான்ஸ் அணி, 1930)
1,000-ஆவது கோல் - ராப் ரென்ஸென்ப்ரின்க் (நெதர்லாந்து அணி, 1978)
2,000-ஆவது கோல் - மார்கஸ் அல்பாக் (ஸ்வீடன் அணி, 2006)
3,000-ஆவது கோல் - என்ஜோ ஃபெர்னான்டஸ் (ஆர்ஜென்டீனா, 2026)
A milestone goal in #FIFAWorldCup history ð pic.twitter.com/3IZuR45tY0
— FIFA World Cup (@FIFAWorldCup) July 7, 2026
Summary
Argentina player Enzo Fernandez Scores the 3,000th Goal in FIFA World Cup History
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







