ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கடைசி 13 நிமிடங்களில் 3 கோல்கள்! அதிரடியாக வென்ற ஆர்ஜென்டீனா!

ஆர்ஜென்டீனா அணி 3 - 2 என்ற கோல் கணக்கில் எகிப்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

2-வது கோல் அடித்ததைக் கொண்டாடிய மெஸ்ஸி - AP

Published On :8 ஜூலை 2026, 3:48 pm IST

ஆர்ஜென்டீனா அணி 3 - 2 என்ற கோல் கணக்கில் எகிப்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

ஃபிஃபா உலகக்கோப்பைக் கால்பந்து தொடரில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஆர்ஜென்டீனா - எகிப்து அணிகளுக்கு இடையேயான போட்டி அட்லாண்டா மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

போட்டி தொடங்கி 15-வது நிமிடத்தில் எகிப்தின் இமாம் அஷூர் ஆடித்த துல்லியமான க்ராஸை தலையால் முட்டி யாசர் இப்ராஹிம் கோலாக மாற்றினார்.

அடுத்த 5 நிமிடங்களில் ஆர்ஜென்டீனாவுக்கு பொன்னான வாய்ப்பாக நிக்கோலஸ் டாக்லியாஃபிகோ ஒரு பெனால்டியைப் பெற்றுத் தந்தார். மெஸ்ஸி அடித்த அந்த பெனால்டி ஷாட்டை எகிப்தின் கோல்கிப்பர் முஸ்தஃபா ஷோபெய்ர் பாய்ந்துத் தடுத்தார்.

முதல் பாதியில் ஆர்ஜென்டீனா கோல் அடிக்கவில்லை. அவர்கள் கோல் அடிக்க முயன்றபோதும் எகிப்து கோல்கீப்பர் அதனைத் துல்லியமாகத் தடுத்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இரண்டாம் பாதியின் 67-வது நிமிடத்தில் முகமது சலாஹ் ஆர்ஜென்டீனா வீரர்களின் தடுப்புகளை மீறி அடித்த க்ராஸை வாங்கிய முஸ்தபா ஜிகோ எகிப்து அணிக்கான 2 கோலை அடித்து அர்ஜென்டினாவை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

இதனால், ஆர்ஜென்டீனா அணியின் மீது அழுத்தம் கூடியது.

போட்டியின் 79-வது நிமிடத்தில் ஆர்ஜென்டீனா வீரர் என்சோ பெர்னாண்டஸ் தூரத்திலிருந்து அடித்த பந்தை கிறிஸ்டியன் ரொமேரோ தலையால் அடித்து கோலாக்கி ஆட்டத்திற்கு உயிர் கொடுத்தார்.

பின்னர், உடனடியாக 84-வது நிமிடத்தில் எகிப்தின் கடுமையான தடுப்புகளையும் மீறி ஜூலியன் அல்வாரெஸ் ஒரு ரிவர்ஸ் பாஸை மெஸ்ஸிக்கு கொடுத்தார். அங்கிருந்த எகிப்து வீரர்கள் அனைவரையும் மீறி மெஸ்ஸி அடித்த அந்தப் பந்து கோல் கம்பத்திற்குள் புகுந்து அர்ஜென்டினாவை நிமிரச் செய்தது.

பெனால்டியை தவறவிட்டதற்கு பரிகாரமாக இந்த கோலை மெஸ்ஸி பரிசளித்தார்.

பரபரப்பான இறுதிக்கட்டத்திற்கு சென்ற ஆட்டம் 90 நிமிடங்களைக் கடந்தது. ஸ்டாப்பேஜ் நேரத்தின் 92-வது நிமிடத்தில் ஆர்ஜென்டீனாவின் அல்வாரெஸ் லௌதாரோ மார்டினெஸுக்கு பந்தை அனுப்பினார்.

வலது மூலையில் இருந்து மார்டினெஸ் அடித்த க்ராஸை தலையால் முட்டி கோல் ஆக மாற்றினார் என்சோ பெர்னாண்டஸ். அந்த கோலின் மூலம், உலகக் கோப்பை வரலாற்றில் 3,000-வது கோலை அடித்து வரலாற்றில் இடம்பெற்றார் என்சோ பெர்னாண்டஸ்.

பரபரப்பான ஆட்டத்தில் கடைசி 13 நிமிடங்களில் 3 கோல்களை அடித்த நடப்பு உலகக்கோப்பை சாம்பியனான ஆர்ஜென்டீனா அணி 3 - 2 என்ற கணக்கில் எகிப்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

அடுத்ததாக, சுவிட்சர்லாந்து அணியுடன் காலிறுதியில் மோதவுள்ளது ஆர்ஜென்டீனா.

Summary

Argentina defeated Egypt 3–2 and advanced to the quarter-finals.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.