ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு ஆர்ஜென்டீனா முன்னேறியது.

FIFA World Cup 2026: Argentina edge England in thriller to set up final with Spain

ஆர்ஜென்டீனா

Published On :16 ஜூலை 2026, 7:39 am IST

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு ஆர்ஜென்டீனா முன்னேறியது.

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா - இங்கிலாந்து அணிகள் வியாழக்கிழமை மோதின. அமெரிக்​கா​வின் மெர்​சிடீஸ் பென்ஸ் திடலில் அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

இதனால் ஆட்டத்தின் இரண்டாவது பாதி சூடு பிடித்தது. இரண்டு அணிகளும் கோல் அடிக்க பல முயற்சிகள் மேற்கொண்டன. ஆட்டத்தின் 55-ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து அணியின் கோர்டான் கோல் கணக்கைத் தொடங்கினார். இதனால், இங்கிலாந்து 1-0 என முன்னிலைப் பெற்றது.

பதிலுக்கு ஆட்டத்தின் இறுதியில் 85-ஆவது நிமிடத்தில் ஆர்ஜென்டீனாவும் கோல் அடிக்க ஆட்டம் 1-1 என சமநிலை பெற்றது. தொடர்ந்து ஆட்டத்தின் 90-ஆவது நிமிடத்தில் ஆர்ஜென்டீனா தனது இரண்டாவது கோலை அடித்தது. இதனால், ஆர்ஜென்டீனா அணி 2-1 என முன்னிலை வகித்தது.

இதன்பிறகு இரண்டு அணிகளும் கோல் அடிக்க மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. ஆட்டத்தின் இறுதிவரை இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால், ஆர்ஜென்டீனா அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

வரும் திங்கள்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியை ஆர்ஜென்டீனா எதிர்கொள்கிறது.

Summary

Messi inspired Argentina's dramatic comeback, setting up Enzo Fernández's 85th-minute equaliser before crossing for Lautaro Martínez's stoppage-time winner against England.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.