கால்பந்து ஆட்டத்தின் உணர்வால் இந்தோனேசியா அதிர்ந்து கொண்டிருக்கிறது என்று ஃபிஃபா உலகக்கோப்பை குறித்து பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசியாவில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) பேசியுள்ளார்.
இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய 3 நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். இதன் முதல் கட்டமாக இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவிற்கு சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாந்தோ விமான நிலையத்திலேயே நேரில் சென்று வரவேற்றார்.
அதன் பின்னர், பரதநாட்டியம் மற்றும் இந்தோனேசியாவின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளுடன் பிரதமர் மோடிக்கு நேற்று (ஜூலை 6) உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இன்று காலை இந்தோனேசியாவின் அதிபர் மாளிகைக்குச் சென்ற பிரதமர் மோடிக்கு, இந்தோனேசியாவின் உயரிய விருதான 'பிந்தாங் அதிபூர்ணா' என்ற விருதை அந்நாட்டின் அதிபர் பிரபோவோ சுபியாண்டோ வழங்கி கௌரவித்துள்ளார்.
அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி பேசியதாவது:
தற்போது உலகம் முழுவதும் ஃபிஃபா உலகக்கோப்பை காய்ச்சல் பிடித்திருக்கின்றது. இந்தோனேசியாவுக்கும் கால்பந்து ஆட்டத்தின் மீது அதிக ஆர்வம் உண்டு. அதே ஆற்றலையும் உற்சாகத்தையும் இன்று இங்கே கொண்டு வந்துள்ளீர்கள்.
இதில் ஒரு சுவாரஸ்யமான தற்செயலான நிகழ்வும் உள்ளது. நான் இந்தோனேசியாவுக்கு வரும்போதெல்லாம், ஃபிஃபா உலகக் கோப்பை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 2018 ஆம் ஆண்டு முதல்முறையாக நான் இந்தோனேசியா வந்தபோது, ஜகார்த்தாவில் நிகழ்வு நடைபெற்றது.
பின்னர், 2022 ஆம் ஆண்டு பாலியிலும், தற்போது மீண்டும் 2026 ஆம் ஆண்டு ஜகார்த்தாவிலும் நடைபெறுகிறது. என்னுடைய இந்த மூன்று பயணத்தின்போதும் கால்பந்து ஆட்டத்தின் உணர்வால் இந்தோனேசியா அதிர்ந்து கொண்டிருக்கிறது.
Summary
Prime Minister Narendra Modi spoke about the FIFA World Cup in Indonesia on Tuesday (July 7), stating that the country is abuzz with the spirit of football.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தகுதியே இல்லாத இழிவான பெண்... பராகுவே செனட்டருக்கு எம்பாபே பதிலடி!

ஃபிஃபா உலகக்கோப்பைத் தொடரை நடத்தும் 3 நாடுகளின் அணிகளும் வெளியேறின!

போர்ச்சுகலை வென்றது ஸ்பெயின்! ரோனால்டோவின் உலகக்கோப்பை கனவு தகர்ந்தது!

16/16: காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தேர்வான 16 அணிகள்..! எகிப்துடன் மோதும் ஆர்ஜென்டீனா!
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan





