ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்தும் 3 நாடுகளின் அணிகளும் இந்தத் தொடரிலிருந்து வெளியேறின.
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரை இந்தாண்டு அமெரிக்கா, மெக்ஸிகோ மற்றும் கனடா அணிகள் இணைந்து நடத்துகின்றன.
பெல்ஜியம் - அமெரிக்கா இடையே நடந்த காலிறுதிக்குத் தகுதி பெறும் போட்டியில் அமெரிக்கா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இந்தத் உலகக்கோப்பைத் தொடரை நடத்தும் 3 நாடுகளின் அணிகளும் தொடரிலிருந்து வெளியேறியுள்ளன.
16 அணிகள் கொண்ட காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மெக்ஸிகோ அணி 2-3 என்ற கணக்கில் மொராக்கோவிடம் தோல்வியடைந்தது. கனடா அணி மொராக்கோவிடம் 0-3 என்ற கணக்கிலும், அமெரிக்கா பெல்ஜியம் அணியிடம் 1-4 என்ற கணக்கிலும் தோல்வியைத் தழுவினர்.
கால்பந்து உலகக்கோப்பை வரலாற்றில் இந்தாண்டே அதிக அணிகள் (48 அணிகள்) பங்கேற்றன. எனவே, வழக்கத்திற்கு மாறாக கூடுதலாக 32 அணிகளுக்கான நாக் - அவுட் சுற்று சேர்க்கப்பட்டது.
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்ஸிகோ அணிகள் நாக் - அவுட் சுற்றை வெற்றியுடன் முடித்த நிலையில், 16 அணிகள் கொண்ட காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியடைந்துள்ளன.
3 நாடுகளின் தோல்வி ஏன் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது என்றால், இந்தத் தொடரில் தான் உலகக்கோப்பை போட்டிகளை 3 நாடுகள் இணைந்து நடத்துகின்றன. மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தின் ஆதரவு இருந்த போதிலும் வட அமெரிக்காவைச் சேர்ந்த 3 நாடுகளும் காலிறுதிக்குச் செல்லும் வாய்ப்பைத் தவறவிட்டுள்ளனர்.
கால்பந்து விளையாட்டில் வட அமெரிக்க நாடுகளுக்கும், கால்பந்தில் சிறந்து விளங்கும் நாடுகளுக்கும் உள்ள இடைவெளியை இந்தத் தோல்வி எடுத்துக்காட்டுவதாக கால்பந்து விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
All three teams hosting the FIFA World Cup tournament have been eliminated
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போர்ச்சுகலை வென்றது ஸ்பெயின்! ரோனால்டோவின் உலகக்கோப்பை கனவு தகர்ந்தது!

16/16: காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தேர்வான 16 அணிகள்..! எகிப்துடன் மோதும் ஆர்ஜென்டீனா!

கால்பந்து உலகக்கோப்பை தொடரில் வெளியேறிய தென் கொரியா: மன்னிப்புக் கேட்ட அதிபர்!

கடைசி நேர கோல்... நாக் - அவுட் சுற்றின் முதல் போட்டியில் வென்ற கனடா!
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan





