/

அரையிறுதியில் ஒருவருக்கு ரெட் கார்டு..! பார்சிலோனா படுதோல்வி, அத்லெடிகோ அபாரம்!

ஸ்பானிஷ் கோப்பை முதல் கட்ட அரையிறுதிப் போட்டியில் தோல்வியுற்ற பார்சிலோனா குறித்து...

News image
பந்தை தன்வசப்படுத்தும் முயற்சியில் அத்லெடிகோ, பார்சிலோனா வீரர்கள்.
Updated On :13 பிப்ரவரி 2026, 1:23 pm

இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்பானிஷ் கோப்பை முதல் கட்ட அரையிறுதிப் போட்டியில் பார்சிலோனா அணி 0-4 என படுதோல்வி அடைந்தது.

அத்லெடிகோ மாட்ரிட் அணியினர் தங்களது மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

பார்சிலோனா படுதோல்வி

அரையிறுதியின் முதல் பாதியிலேயே அத்லெடிகோ மாட்ரிட் 4 கோல்கள் அடித்து அசத்தியது.

பார்சிலோனாவின் கோல் கீப்பர் ஜோன் கார்சியா தவறினால் எரிக் கார்சியா ஓன் கோல் அடித்தார். அந்த அழுத்தத்திலேயே கோல்கீப்பர் மேலும் பல தவறுகளைச் செய்தார்.

இரண்டாம் பாதியில் பார்சிலோனா அணி எவ்வளவோ முயற்சித்தும் கோல் அடிக்க முடியவில்லை என்பது சோகத்தை ஏற்படுத்தியது.

இரண்டாம் பாதியின் தொடக்கத்தில் பார்சிலோனா அணியினரால் அடிக்கப்பட்ட கோலும் ஆஃப் சைடு விதியினால் நீக்கப்பட்டது.

ஆட்டத்தில் வெடித்த மோதல்

ஆட்டத்தின் 85-ஆவது நிமிஷத்தில் எரிக் கார்சியாவுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது.

கடைசி சில நிமிஷங்களில் இரு அணியினரும் மோதிக்கொண்டனர்.

வீரர்கள் மோதலும், நடுவரின் மஞ்சள் அட்டை காண்பித்தலும்.

வீரர்கள் மோதலும், நடுவரின் மஞ்சள் அட்டை காண்பித்தலும்.

பார்சிலோனா வீரர்களுக்கு 3 மஞ்சள் கார்டுகள், அத்லெடிகோ மாட்ரிட் அணியினருக்கு 5 மஞ்சள் அட்டைகளும் வழங்கப்பட்டன.

லாமின் யமால் தவிர்த்து, நட்சத்திர வீரர்கள் இல்லாமல் பார்சிலோனா தடுமாறியது. இரண்டாம் கட்ட அரையிறுதிப் போட்டி மார்ச் 4ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

summary

Goalkeeper's gaffe as Barcelona concedes four goals in 1st half in big Copa loss to Atletico.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.