/

லாமின் யமால் ஆட்ட நாயகன்..! முதலிடத்தை தக்கவைத்த பார்சிலோனா!

லா லிகா கால்பந்து தொடரில் பார்சிலோனாவின் அசத்தல் வெற்றி குறித்து...

News image
பார்சிலோனா அணியின் வீரர்கள். - படம்: எக்ஸ் / எஃப்சி பார்சிலோனா.
Updated On :1 பிப்ரவரி 2026, 9:51 am

இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து தொடரில் பார்சிலோனா அபார வெற்றி பெற்றது. லாமின் யமால் ஆட்ட நாயகனாகத் தேர்வானார்.

இந்த வெற்றியின் மூலமாக புள்ளிப் பட்டியலில் பார்சிலோனா அணி தனது முதலிடத்தை தக்கவைத்துள்ளது.

எல்சே அணி தனது சொந்த மண்ணில் பார்சிலோனாவை எதிர்கொண்டது.

இந்தப் போட்டியில் முதல் 6ஆவது நிமிஷத்திலேயே பார்சிலோனாவின் லாமின் யமால் கோல் அடிக்க, எல்சேயின் ரோட்ரிகோ 29ஆவது நிமிஷத்தில் சமன் செய்தார்.

பிறகு, 40-ஆவது நிமிஷத்தில் பார்சிலோனாவின் ஃபெர்ரன் டோரஸ் கோல் அடித்து 2-1 என முன்னிலை வகித்தது.

இரண்டாம் பாதியில் 72-ஆவது நிமிஷத்தில் பார்சிலோனாவின் மார்கஸ் ராஷ்ஃபோர்டு அசத்தலாக கோல் அடித்து 3-1 என மாற்றினார்.

லா லிகா புள்ளிப் பட்டியல் 2025/26

1. பார்சிலோனா - 55 புள்ளிகள்

2. ரியல் மாட்ரிட் - 51 புள்ளிகள்

3. அத்லெடிகோ மாட்ரிட் - 45 புள்ளிகள்

4. வில்லாரியல் - 42 புள்ளிகள்

5. எஸ்பான்யோல் - 34 புள்ளிகள்

6. ரியல் பெடிஸ் - 32 புள்ளிகள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.