/

‘பாக்ஸ் ஆஃபிஸ் கோட்’ ரோஜர் ஃபெடரர்! 120 வினாடிகளில் விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுகள்!

‘ஹால் ஆஃப் பேம்’ டென்னிஸ் போட்டிக்கான டிக்கெட்டுகள் 120 வினாடிகளில் விற்றுத்தீர்ந்ததைப் பற்றி...

News image
ரோஜர் ஃபெடரர்.
Updated On :12 பிப்ரவரி 2026, 12:36 pm

இணையதளச் செய்திப் பிரிவு

பிரபல டென்னிஸ் நட்சத்திரம் ரோஜர் ஃபெடரர் விளையாடவுள்ள சர்வதேச ‘ஹால் ஆஃப் பேம்’ டென்னிஸ் தொடருக்கான டிக்கெட்டுகள் 120 வினாடிகளில் விற்றுத்தீர்ந்தது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ரோட் தீவின் நியூபோர்ட்டில் அமைந்துள்ள சர்வதேச டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேம் திடலில் டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகிறது. சுமார் 4,000 இருக்கைகளைக் கொண்ட இந்த திடலில் ஜாம்பவான் வீரர்களுக்கான போட்டிகள் நடத்தப்படுகிறது.

Story image

இந்த நிலையில், டென்னிஸ் உலகில் மிகவும் மதிப்புமிக்க வீரர்களில் ஒருவரான ரோஜர் ஃபெடரர், போட்டிகளில் ஓய்வுபெற்ற நிலையிலும் தான் ஒரு ஜாம்பவான் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். அவர் ஆகஸ்ட் 29 ஆம் தேதி ‘ஹால் ஆஃப் பேம்’ டென்னிஸ் திடலில் முன்னாள் டென்னிஸ் வீராங்கனை மேரி கரிலோவுடன் இணைந்து விளையாடவிருக்கிறார்.

20 கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களை வென்ற முதல் வீரரான ரோஜர் ஃபெடரர் ஆட்டத்தைப் பார்க்க 3,600 இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இந்தப் போட்டிக்காக கூடுதலாக 900 டிக்கெட்டுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகள் புதன்கிழமை காலை 10 மணிக்குத் தொடங்கியது. அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகள் தொடங்கியதுமே 120 வினாடிகளில் (2 நிமிஷம்) விற்றுத்தீர்ந்தன.

யார் இந்த ரோஜர் ஃபெடரர்?

2003 ஆம் ஆண்டில் விம்பிள்டன் வெற்றியுடன் தொடங்கியது ரோஜர் பெடரரின் கிராண்ட்ஸ்லாம் பயணம். இதுவரையில் 20 கிராண்ஸ்ட்லாம் போட்டிகளில் வென்றுள்ளார் ரோஜர் ஃபெடரர் . ரோஜரின் 24 ஆண்டு கால ஆட்டங்களில், 310 வாரங்கள் தொடர்ந்து உலகத் தரவரிசையில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தவர். 6 ஏடிபி பட்டங்கள், 28 மாஸ்டர்ஸ் பட்டங்கள் என்ற சாதனைகளுக்கும் ரோஜர் சொந்தக்காரர்.

தொடர்ந்து 8 விம்பிள்டன் தொடர்களில் வெற்றி பெற்ற சாதனையை உருவாக்கியவரும் ரோஜர்தான்! அதனைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபனில் பட்டத்தை வென்றதுடன் 20 கிராண்டஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் டென்னிஸ் வீரர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார் ரோஜர் ஃபெடரர்.

அதன்பின்னர், ரபேல் நடால் 22 பட்டங்களுடன் சாதனை படைத்த நிலையில், நோவக் ஜோகோவிச் 24 பட்டங்களைக் கைப்பற்றி சாதனை படைத்தார். இதுவரை 103 சுற்றுப்பயணங்களில் வெற்றி, மொத்தமாக 1251 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறார் ரோஜர் ஃபெடரர். மேலும், ஏடிபி தரவரிசையில் தொடர்ச்சியாக 237 வாரங்கள் உள்பட 310 வாரங்கள் உலகின் நம்பர் 1 வீரர் என முதலிடத்தில் இருந்து சாதனை படைத்துள்ளார்.

summary

Is Roger Federer the best-selling tennis player of all time? Tickets for his Hall of Fame induction ceremony sold out in just 2 minutes. This happened despite the organisation adding more tickets for the event.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.