ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சுரங்கப் பாதையின் இறுதியில் வெளிச்சத்தைக் கண்டேன்: கார்ல்சென்

இரண்டாவது முறையாக இ-ஸ்போர்ட்ஸ் உலகக் கோப்பை வென்ற கார்ல்சென் பேட்டி குறித்து...

Magnus Carlsen

மாக்னஸ் கார்ல்சென் - படங்கள்: எக்ஸ் / Esports World Cup

Published On :16 ஆகஸ்ட் 2026, 3:42 pm IST

இரண்டாவது முறையாக இ-ஸ்போர்ட்ஸ் உலகக் கோப்பை வென்ற கார்ல்சென், “சுரங்கப் பாதையின் இறுதியில் வெளிச்சத்தைக் கண்டேன்” எனக் கூறியுள்ளார்.

ஐந்து முறை உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் சாம்பியனான மாக்னஸ் கார்ல்சென் அதன் மீதான் சலிப்பினால் அந்தப் போட்டிகள் விளையாடுவதை கைவிட்டார். பின்னர் ரேபிட், பிளிட்ஜ் பிரிவுகளில் விளையாடி வருகிறார்.

இந்த ஆண்டு பிப்ரவரியில் கார்ல்சென் ஃபிடே ஃபிரிஸ்டைல் செஸ் உலக சாம்பியனில் பட்டம் வென்றார். அடுத்து மே மாதம் டெபே சிகேமன் & கோ தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார். அடுத்து இப்போது இ-ஸ்போர்ட்ஸ் உலகக் கோப்பையில் சாம்பியனாகியுள்ளார்.

இருந்தும் அவரது சொந்த நாட்டிலேயே நடைபெறும் நார்வே செஸ்ஸில் தமிழக வீரர் ஆர். பிரக்ஞானந்தாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார். பின்னர், உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப்பிலும் சாம்பியன் ஆகாமல் தோல்வியுற்றார்.

இந்த நிலையில், இந்த வெற்றி குறித்து மாக்னஸ் கார்ல்சென் கூறியிருப்பதாவது:

கால்பந்து பயிற்சியாளர் ஜோஷ் மௌரிங்கோவின் முதல் சீசன் ஆவணப் படத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் அவர்கள் அனைத்து போட்டிகளிலும் 1- 0 என வென்று கொண்டிருந்தனர். அது அழகாக இருப்பதாக எண்ணினேன்.

இந்தத் தொடரில் நான் மிகவும் உண்மையாக, எதையும் அதிகமாக முயற்சிக்காமல் இருக்க விரும்பினேன். என்னால் முடியும்போதெல்லாம் எனது ஆற்றலை சேமித்து வைத்திருந்தேன். ஏனெனில், சில போட்டிகள் மிகவும் சுவாரசியமற்று இருந்தது. ஆனால், இந்தப் போட்டிகள் அப்படிப்பட்டவைதானே.

எனக்கு விடுப்பு தேவைப்பட்டது. வியாழக்கிழமை மிகவும் மோசமாக இருந்தது. வெள்ளிக்கிழமை ஓரளவுக்கு நன்றாக இருந்தது. பிறகுதான் சிந்தித்தேன். சுரங்கப் பாதையின் இறுதியில் வெளிச்சத்தைக் கண்டேன்.

இந்தத் தொடரில் அதிக ரிஸ்க் எடுக்க வேண்டாமென முன்பு முடிவெடுத்திருந்தேன். வானிலையும் அப்படியாகவே அமைந்தது. முதல் கோப்பை நன்றாக இருந்தது. இருந்தாலும் இந்தக் கோப்பை எனக்கு மிகவும் ஆறுதல் அளித்துள்ளது. நீண்ட நாள்களாக பெரிய கோப்பை இல்லாமல் இருந்ததால் இந்தக் கோப்பை தேவையானதாக அமைந்தது என்றார் .

Summary

Started to see light at the end of the tunnel Says after EWS cup defending by Magnus Carlsen

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.