ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இ-ஸ்போர்ட்ஸ் உலகக் கோப்பை செஸ் தொடரில் கார்ல்சென் மீண்டும் சாம்பியன்!

இரண்டாவது முறையாக இஸ்போர்ட்ஸ் செஸ் உலகக் கோப்பையை வென்ற மாக்னஸ் கார்ல்சென் குறித்து...

Carlsen crowned champion of the e-sports World Cup chess tournament.

இ-ஸ்போர்ட்ஸ் உலகக் கோப்பை செஸ் தொடரில் கார்ல்சென் சாம்பியன் - படம்: எக்ஸ் / Esports World Cup

Published On :16 ஆகஸ்ட் 2026, 3:14 pm IST

நார்வே நாட்டைச் சேர்ந்த மாக்னஸ் கார்ல்சென் (35 வயது) இரண்டாவது முறையாக இஸ்போர்ட்ஸ் செஸ் உலகக் கோப்பையை வென்று அசத்தியுள்ளார்.

இஸ்போர்ட்ஸ் செஸ் உலகக் கோப்பை கடந்த ஆண்டு (2025) முதல் நடைபெற்று வருகிறது. இந்தாண்டுக்கான போட்டிகளில் பாரீஸில் ஆக.11 -15ஆம் தேதி வரை நடைபெற்றன.

இந்த உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி நார்வே நாட்டின் மாக்னஸ் கார்ல்சென் மற்றும் பெலாரஸ் நாட்டின் டெனிஸ் லஸாவிக் மோதினார்கள்.

இந்தப் போட்டியில் முதல் செட்டில் கார்ல்சென் 3-1 எனவும் இரண்டாவது செட்டில் 3-1 எனவும் வென்று 2-0 என அபார வெற்றியுடன் உலகக் கோப்பையை வென்றார்.

கடந்த ஆண்டும் கார்ல்சென் இந்த இஸ்போர்ட்ஸ் உலகக் கோப்பையை வென்றிருந்தார். தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக இந்தக் கோப்பையை வென்று ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

இந்த உலகக் கோப்பையின்போது கால்பந்து பயிற்சியாளர் ஜோஷ் மௌரிங்கோவின் நெட்பிளிக்ஸ் ஆவணப் படத்தைப் பார்த்ததாக கார்ல்சென் கூறியுள்ளார்.

Summary

Carlsen embraces Mourinho-style pragmatism to defend EWC chess title

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.