அத்லெடிகோ மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் ஜூலியன் அல்வரெஸ் பார்சிலோனா அணிக்கு எதிரான போட்டியில் மிகவும் அசத்தலான ஃபிரி கிக்கில் கோல் அடித்தார்.
பார்சிலோனா அணி தனது சொந்த மண்ணில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அத்லெடிகோ மாட்ரிட் இடம் தோல்வியடைந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த ஜூலியன் அல்வரெஸ் தனது ஃபிரி கிக் கோல் அடிக்க மெஸ்ஸிடம் இருந்து உத்வேகம் பெற்றதாகக் கூறியுள்ளார். மெஸ்ஸியும் அல்வரெஸும் ஒன்றாக இணைந்து ஆர்ஜென்டீனா தேசிய அணியில் விளையாடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் ஃபிரி கிக்கில் கோல் அடித்தவர்களில் மெஸ்ஸி இரண்டாம் இடம் (71) பிடித்துள்ளார். இந்த நிலையில், ஜூலியன் அல்வரெஸ் கூறியிருப்பதாவது:
லிவர்பூல் அணிக்கு எதிராக மெஸ்ஸி இங்கு (கேம்ப் நௌ திடல்) 2019ல் கோல் அடித்திருந்தார். அதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். ஆனால், நான் அடித்ததும் அதே மூளையில் விழுந்தது எனச் சொல்ல முடியாது.
பந்தை அடிக்கும்போதுதான் நம்மால் உணர முடியும். ஆனால், நான் அடிக்கும்போதே விட்டுவிட்டேன். நேற்று பயிற்சியின்போது 5, 6 ஃபிரி கிக்கினை முயற்சித்தேன். அதில், ஒன்றைக் கூட கோலாக மாற்றவில்லை. ஆனால், இன்று நடந்துவிட்டது.
மெஸ்ஸி தேசிய அணியில் விளையாடும்போது அவர் எப்படி ஃபிரி கிக்கினை அடிக்கிறார் என்பதைக் கூர்ந்து கவனிப்பேன். அதேபோல் நானும் கோணங்களை எல்லாம் கணித்து பயிற்சியின்போது முயற்சித்து பார்ப்பேன் என்றார்.
சாம்பியன்ஸ் லீக்கில் 2017ல் டி மரியா அடித்த ஃபிரி கிக் கோல்-க்குப் பிறகு அல்வரெஸ்தான் முதல்முறையாக கோல் அடித்துள்ளார் என்பதும் கவனிக்கத்தக்கது.
Summary
Atletico Madrid's Julian Alvarez reveals Lionel Messi inspiration behind free kick against Barcelona.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கால்பந்து உலகக் கோப்பை: மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீன அணி!

மெஸ்ஸிக்குக் காயம்..! கால்பந்து உலகக் கோப்பையில் விளையாடுவாரா?

அதிவேகமாக 100 கோல்கள் பங்களிப்பு..! மெஸ்ஸியின் வரலாற்றுச் சாதனை!

காலிறுதியில் பார்சிலோனா போராடி தோல்வி: அத்லெடிகோ அறையிறுதிக்கு முன்னேற்றம்!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK




