திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஆயுஷ் ஷெட்டி அபாரம்; சிந்து முன்னேற்றம்

சீனாவில் நடைபெறும் ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, பி.வி.சிந்து ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினா்.

News image
Updated On :9 ஏப்ரல் 2026, 5:01 am IST

சீனாவில் நடைபெறும் ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, பி.வி.சிந்து ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினா்.

ஆடவா் ஒற்றையா் முதல் சுற்றில், உலகின் 25-ஆம் நிலையில் இருக்கும் ஆயுஷ் ஷெட்டி 21-13, 21-16 என்ற கேம்களில், உலகின் 7-ஆம் நிலையில் இருக்கும் சீனாவின் லி ஷி ஃபெங்கை வீழ்த்தி அசத்தினாா். இந்த ஆட்டம் 51 நிமிஷங்களில் நிறைவடைந்தது.

ஹெச்.எஸ். பிரணய் 24-22, 21-12 என்ற கணக்கில், வியத்நாமின் குயென் ஹாய் டாங்கை 47 நிமிஷங்களில் வென்றாா். எனினும் லக்ஷயா சென் 12-21, 19-21 என்ற நோ் கேம்களில், ஹாங்காங்கின் லீ செயுக் யுவிடம் தோல்வியுற்றாா்.

அதேபோல், கே.ஸ்ரீகாந்த் 21-18, 9-21, 11-21 என்ற வகையில், சிங்கப்பூரின் லோ கீன் யுவிடம் தோல்வி கண்டாா்.

சிந்து வெற்றி: இப்போட்டியின் மகளிா் ஒற்றையா் பிரிவில், பி.வி.சிந்து 15-21, 21-11, 21-19 என்ற கேம்களில், மலேசியாவின் வாங் லிங் சிங்கை போராடி வீழ்த்தினாா். இந்த ஆட்டம் 1 மணிநேரம், 7 நிமிஷங்கள் நீடித்தது.

இதர ஆட்டங்களில், தன்வி சா்மா 19-21, 14-21 என்ற கணக்கில், மலேசியாவின் லெட்சனா கருப்பதேவனிடமும், மாளவிகா பன்சோத் 10-21, 19-21 என தாய்லாந்தின் புசானன் ஆங்பம்ரங்பானிடமும் தோல்வியுற்றனா்.

மகளிா் இரட்டையா்: முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ருதி மிஸ்ரா/பிரியா கொன்ஜெங்பம் கூட்டணி 21-15, 17-21, 21-13 என்ற கேம்களில், வியத்நாமின் தி டியு லி பாம்/தி கான் பாம் இணையை வீழ்த்தியது.

எனினும் அஸ்வினி பாட்/ஷிகா கௌதம் ஜோடி 10-21, 10-21 என்ற நோ் கேம்களில், தாய்லாந்தின் நபாபகோன் துங்கசடான்/ஹதாய்திப் மிஜாத் கூட்டணியிடம் தோற்றது.

கவிபிரியா செல்வம்/சிம்ரன் சிங்கி இணை 9-21, 8-21 என, சீனாவின் லுவோ ஜுமின்/யோன் லி கூட்டணியிடம் தோல்வி கண்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.