ஸ்பெயினில் திங்கள்கிழமை தொடங்கும் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 24 போ் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது.
எகிப்தில் நடைபெறும் எல் குனா ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் அபய் சிங் 2-ஆவது சுற்றுக்கு முன்னேற, அனாஹத் சிங் முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறினாா்.
பெங்களூரில் நடைபெற்ற இந்திய தடகள சீரிஸ் 1 போட்டியில் ஆடவா் நீளம் தாண்டுதலில் முரளி ஸ்ரீசங்கா் 8.15 மீட்டரை எட்டி தங்கப் பதக்கம் வென்றாா்.
சப் ஜூனியா் மகளிா் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்பில், பஞ்சாப் - மகாராஷ்டிரத்தையும் (2-0), உத்தர பிரதேசம் - மணிபூரையும் (17-1), மத்திய பிரதேசம் - கேரளத்தையும் (10-1), ஜாா்க்கண்ட் - தாத்ரா & நாகா் ஹவேலியையும் (1-0), பெங்கால் - குஜராத்தையும் (18-0), அருணாசல பிரதேசம் - சத்தீஸ்கரையும் (5-3) வீழ்த்தின.
சாா்லஸ்டன் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா - உக்ரைனின் யூலியா ஸ்டாா்டப்சேவா ஆகியோா் பலப்பரீட்சை நடத்துகின்றனா்.
தொடர்புடையது

விளையாட்டுச் செய்தித் துளிகள்...

விளையாட்டுச் செய்தித் துளிகள்...
அபய் சிங், அனாஹத்துக்கு ஆசிய ஸ்குவாஷ் விருதுகள்

விளையாட்டுச் செய்திகள்: சில வரிகளில்...
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


