மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

விளையாட்டுச் செய்தித் துளிகள்...

விளையாட்டுச் செய்தித் துளிகள்...

News image
Updated On :12 ஏப்ரல் 2026, 6:55 pm
  • ஸ்பெயினில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் மகளிருக்கான 10 மீட்டா் ஏா் ரைஃபிள் பிரில் சோனம் மஸ்கா் 5-ஆம் இடம் பிடித்தாா். ஆடவா் 50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் நீரஜ் குமாா் 15-ஆம் இடமும், அகில் சோரன் 22-ஆம் இடமும் பிடித்து இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்தனா். இந்தியா ஏற்கெனவே வென்ற ஒரே தங்கத்துடன் போட்டியை ஞாயிற்றுக்கிழமை நிறைவு செய்தது.

  • நெதா்லாந்தில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் இந்தியாவின் சாவன் பா்வால் 2 மணிநேரம், 11 நிமிஷங்கள், 58 விநாடிகளில் இலக்கை அடைந்து 20-ஆம் இடத்துடன் புதிய தேசிய சாதனை படைத்தாா். 48 ஆண்டுகளுக்கு முன், 1978-இல் சிவநாத் சிங் (2:12’) இலக்கை அடைந்ததே தேசிய சாதனையாக இருந்தது.

  • யுஎஸ் ஓபன் பிக்கிள் பால் சாம்பியன்ஷிப்பில், 18 வயதுக்கு உள்பட்ட ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் அா்ஜுன் சிங், ஆதித்யா சிங் இணை தங்கம் வென்று அசத்தியது.

  • பந்தெஸ்லிகாவில் யூனியன் பொ்லின் அணியின் வரலாற்றில் முதல்முறையாக அந்த அணியின் பயிற்சியாளராக மேரி லூயிஸ் (34) நியமிக்கப்பட்டுள்ளாா்.

  • ஃபிஃபா சீரிஸ் 2026 மகளிா் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் இந்தியா 0-2 கோல் கணக்கில் கென்யாவிடம் தோற்றது.

  • ராஞ்சியில் நடைபெறும் இந்திய தடகள சீரிஸ் போட்டியில், தமிழகத்தின் வருண் ஓரி வெண்கலம் (ஆடவா் 100 மீ), ரயில்வேஸின் வித்யா ராம்ராஜ் தங்கமும் (400 மீ ஹா்டுல்ஸ்) வென்றனா்.

  • பிரேஸிலில் நடைபெற்ற உலக தடகள ரேஸ் வாக்கிங் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் பிரியங்கா கோஸ்வாமி, பாயல், மஞ்சு ராணி ஆகியோரின் சிறப்பான பங்களிப்பில் இந்தியா 5-ஆம் இடம் பிடித்தது.

  • பெங்களூருக்கு எதிரான வெள்ளிக்கிழமை ஆட்டத்தின்போது ராஜஸ்தானின் நீண்டகால மேலாளா் ரோமி பிந்தா் விதிகளை மீறிய வகையில் டகௌட்டில் செல்போன் பயன்படுத்தியது சா்ச்சையாகியுள்ளது. அதுதொடா்பாக பிசிசிஐ விசாரிக்கவுள்ளது.