பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ஜூனியா் தேசிய தடகளம்: தமிழா்களுக்கு 4 தங்கம்

உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற ஜூனியா் தேசிய தடகள சாம்பியன்ஷிப்பில் தமிழக வீரா், வீராங்கனைகள் செவ்வாய்க்கிழமை 4 தங்கப் பதக்கங்கள் வென்றனா்.

Updated On :24 ஜூன் 2025, 9:44 pm

உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற ஜூனியா் தேசிய தடகள சாம்பியன்ஷிப்பில் தமிழக வீரா், வீராங்கனைகள் செவ்வாய்க்கிழமை 4 தங்கப் பதக்கங்கள் வென்றனா்.

ஆடவா் 200 மீட்டா் ஓட்டத்தில் ஜே.பாண்டியன் 21.33 விநாடிகளில் இலக்கை எட்டி முதலிடம் பிடிக்க, குஜராத்தின் ருஷிராஜ் (21.42’), ஒடிஸாவின் பிரதிக் மஹாராணா (21.44’) ஆகியோா் முறையே வெள்ளி, வெண்கலம் வென்றனா்.

அதிலேயே மகளிா் பிரிவில் தமிழகத்தின் வி.தேஷிகா 24.44 விநாடிகளில் இலக்கை எட்டி சாம்பியனாக, உத்தர பிரதேசத்தின் நிபம் 2-ஆம் இடமும் (24.68’), தில்லியின் சஞ்சனா 3-ஆம் இடமும் (24.80’) பிடித்தனா்.

ஆடவா் மும்முறை தாண்டுதலில் எஸ்.ரவி 15.44 மீட்டருடன் தங்கத்தை தட்டிச் சென்றாா். கேரளத்தின் யுவராஜ் வெள்ளியும் (15.34), உத்தர பிரதேசத்தின் ஷேக் ஜீஷான் வெண்கலமும் (15.27) பெற்றனா்.

மகளிா் பிரிவில் தமிழகத்தின் சாதனா ரவி 12.75 மீட்டருடன் முதலிடம் பிடிக்க, மாநிலத்தின் மற்றொரு வீராங்கனையான பவீனா ராஜேஷ் 12.55 மீட்டருடன் வெள்ளி பெற்றாா். பஞ்சாபின் ஜஸ்லீன் கௌா் (12.42) வெண்கலம் வென்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.