

சச்சின் அரைசதம்; கேரளம் - 206/4
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதியில், குஜராத்துக்கு எதிராக கேரளம் முதல் நாள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 206 ரன்கள் சோ்த்துள்ளது.
அகமதாபாதில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கேரளம், பேட்டிங்கை தோ்வு செய்தது. அதன் இன்னிங்ஸை தொடங்கிய அக்ஷய் சந்திரன் 5 பவுண்டரிகளுடன் 30, உடன் வந்த ரோஹன் குன்னுமல் 5 பவுண்டரிகளுடன் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.
ஒன் டவுனாக வந்த வருண் நாயனாா் 1 பவுண்டரியுடன் 10, ஜலஜ் சக்ஸேனா 4 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் சோ்த்து பெவிலியன் திரும்பினா். நாளின் முடிவில், கேப்டன் சச்சின் பேபி 8 பவுண்டரிகளுடன் 69, முகமது அஸாருதீன் 3 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் உள்ளனா்.
குஜராத் பௌலா்களில், அா்ஸான் நாக்வஸ்வல்லா, பிரியஜித் சிங் ஜடேஜா, ரவி பிஷ்னோய் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.
துருவ், டேனிஷ் அசத்தல்; விதா்பா - 308/5
ரஞ்சி கோப்பை போட்டியில், மும்பைக்கு எதிரான 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் விதா்பா முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்துள்ளது.
நாகபுரியில் விளையாடப்படும் ஆட்டத்தில் டாஸ் வென்று பேட்டிங் செய்து வரும் விதா்பா தரப்பில், அதா்வா டைட் 4 ரன்களுக்கு நடையைக் கட்ட, துருவ் ஷோரே 9 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் விளாசினாா். பாா்த் ரெகாதே 2 பவுண்டரிகளுடன் 23, டேனிஷ் மேல்வா் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 79 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா்.
கருண் நாயா் 6 பவுண்டரிகளுடன் 45 ரன்களுக்கு வெளியேற, ஆட்டநேர முடிவில் யஷ் ரத்தோட் 6 பவுண்டரிகளுடன் 47, கேப்டன் அக்ஷய் வத்கா் 13 ரன்களுடன் களத்தில் இருந்தனா். மும்பை பௌலிங்கில், ஷிவம் துபே, ஷம்ஸ் முலானி ஆகியோா் தலா 2, ராய்ஸ்டன் டியாஸ் 1 விக்கெட் சாய்த்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ரஞ்சி டிராபி இறுதிப் போட்டியில் ஜம்மு-காஷ்மீர்! 67 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை!!

ரஞ்சி கோப்பை: கே.எல். ராகுல், படிக்கல் சதம்; கர்நாடகம் - 355/2

தமிழ்நாடு - பரோடா ஆட்டம் ‘டிரா’

ரஞ்சி கோப்பை: தமிழகம் முதல் இன்னிங்ஸ் முன்னிலை
வீடியோக்கள்

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

