தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

கிய்ராசி ஹாட்ரிக் கோல் வீண்: அரையிறுதிக்கு முன்னேறிய பார்சிலோனா!

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் பார்சிலோனா அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

News image
பார்சிலோனா அணி வீரர்கள். - படம்: ஏபி
Updated On :16 ஏப்ரல் 2025, 7:59 am

DIN

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் பார்சிலோனா அணி மொத்த கோல்கள் அடிப்படையில் டார்ட்மண்ட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

சாம்பியன்ஸ் லீக்கில் டார்ட்மண்ட் உடனான முதல்கட்ட காலிறுதிப் போட்டியில் பார்சிலோனா 4-0 என அசத்தலாக வென்றது.

இரண்டாம் கட்ட போட்டி இந்திய நேரப்படி நேற்றிரவு 12.30 மணிக்கு நடைபெற்றது. இந்தப் போட்டியில் டார்ட்மண்ட் 3-1 என வென்றது.

இருப்பினும் இரண்டு கட்ட ஆட்டங்களில் இரண்டு அணிகளும் பெற்ற மொத்த கோல்கள் அடிப்படையில் 5-3 என பார்சிலோனா வெற்றி பெற்றது.

கிய்ராசியின் ஹாட்ரிக் கோல் வீண்

கினியா நாட்டிற்காக விளையாடும் கிய்ராசி சாம்பியன்ஸ் லீக்கில் டார்ட்மண்ட் அணிக்காக விளையாடி வருகிறார். இந்தப் போட்டியில் கிய்ராசி 11(பெனால்டி) , 49, 76ஆவது நிமிஷங்களில் 3 கோல்கள் அடித்து பார்சிலோனா அணியை மிரட்டினார்.

பார்சிலோனா அணிக்கு 54ஆவது நிமிஷத்தில் ஒரு கோல் கிடைத்தது. அதுவும் எதிரணியினரின் செய்த ஓன் கோல் தவறினால் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் இலக்கை நோக்கி டார்ட்மண்ட் அணி 11 முறை பந்தினை அடித்தது. ஆனால், பார்சிலோனா அணியோ 2 முறைதான் அடித்தது. அந்தளவுக்கு இந்தப் போட்டியில் டார்ட்மண்ட் அணி ஆதிக்கம் செலுத்தியது.

முதல்கட்ட போட்டியில் முன்னிலை பெற்றதால் மட்டுமே பார்சிலோனா அணி இந்தப் போட்டியில் வென்றது.

வெற்றிகரமான முதல் தோல்வி

2025ஆம் ஆண்டில் தோல்வியே காணாத அணியாக இருந்த பார்சிலோனா அணிக்கு இது முதல் தோல்வியாகும். இருப்பினும் அரையிறுத்திக்கு முன்னேறியதால் வெற்றிகரமான தோல்வியாகவே கருதப்படுகிறது.

இந்த சீசனில் சாம்பியன் லீக்கில் மட்டுமே 12,11 கோல்கள் அடித்த ரபீனியா, லெவண்டாவ்ஸ்கியால் ஒரு கோல்கூட அடிக்கமுடியவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

பார்சிலோனா அணியின் பயிற்சியாளர் ஹன்சி பிளிக், “இந்தநாள் வருமென்று தோன்றியது. டார்ட்மண்ட் சிறப்பாக விளையாடினார்கள். அரையிறுதிக்குச் சென்ற எனது அணிக்கு வாழ்த்துகள்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.