டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

டபிள்யூபிபிஎல்: அரையிறுதிக்கு முன்னேறிய பெங்களூரு ஜவான்ஸ்..! அட்லீ பகிர்ந்த செல்ஃபி விடியோ!

டபிள்யூபிபிஎல் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறிய அட்லீயின் அணி குறித்து...

News image
அரையிறுதிக்கு முன்னேறிய பெங்களூரு ஜவான்ஸ். - படம்: இன்ஸ்டா / பெங்களூரு ஜவான்ஸ்.
Updated On :6 பிப்ரவரி 2026, 9:43 am

இணையதளச் செய்திப் பிரிவு

டபிள்யூபிபிஎல் இரண்டாவது சீசனில் அட்லியின் அணியான பெங்களூரு ஜவான்ஸ் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இந்த வெற்றிக்குப் பிறகு இயக்குநர் அட்லி தனது சமூக வலைதள பக்கத்தில் செல்ஃபி விடியோவை பகிர்ந்துள்ளார்.

டபிள்யூபிபிஎல் (உலக பிக்கில்பால் லீக்) முதல் சீசன் கடந்தாண்டு நடைபெற்றது. இதில் பெங்களூரு ஜவான்ஸ் கோப்பை வென்றது. இந்த அணியின் உரிமையாளராக இயக்குநர் அட்லீயும் அவரது மனைவி பிரியா அட்லீயும் இருக்கிறார்கள்.

தற்போது, இரண்டாவது சீசன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பெங்களூரு ஜவான்ஸ் 3-2 கேமில் ராஜஸ்தான் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.

இந்த வெற்றிக்குப் பிறகு இயக்குநர் அட்லீ விடியோ வெளியிட்டுள்ளார்.

இந்தப் போட்டியில் ஆட்ட நாயகனாக பெங்களூரு ஜவான்ஸ் அணியின் எடூராடோ இரிஜாரி தேர்வானார்.

சமந்தாவின் சென்னை சூப்பர் சாம்பியன்ஸ் 4-1 என்ற கேமில் ஹைதராபாதை வீழ்த்தியுள்ளது.

சமந்தாவின் சென்னை அணி தோல்விகளே சந்திக்காமல் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது, அட்லீ தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் தீபிகா படுகோன் நடிப்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகை சமந்தா தனது சொந்த தயாரிப்பில் மா இன்டி பங்காரம் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.